புதுப்பிக்கப்பட்ட அண்ணா, கருணாநிதி நினைவிடங்கள்.. இன்று திறக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

Feb 26, 2024,05:12 PM IST

சென்னை:  புதுப்பிக்கப்பட்ட அறிஞர் அண்ணாவின் நினைவிடம் மற்றும் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடங்களை முதல்வர் மு க ஸ்டாலின் இன்று மாலை 7 மணிக்கு திறந்து வைக்க உள்ளார்.


கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு க ஸ்டாலின் 110 விதியின் கீழ் சென்னை காமராஜர் சாலை, மெரினா கடற்கரையில் புதிய கலைஞர் நினைவிடம் மற்றும்  அறிஞர் அண்ணாவின் நினைவிடம் புனரமைக்க  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை அடுத்து இதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த நினைவிடம் கிட்டத்தட்ட 35 கோடி செலவில் 8.57 ஏக்கர் பரப்பளவில் மிகப் பிரம்மாண்டமாக அதிநவீன  தொழில்நுட்ப வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.




இந்த நிலையில் நவீன தமிழகத்தின் சிற்பி என அழைக்கப்படும் மறைந்த முதல்வர் கருணாநிதியின் புதிய நினைவிடம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட பேரறிஞர் அண்ணாவின் நினைவிடங்களை இன்று மாலை 7 மணிக்கு முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இதனைக் காண நினைவிடத்திற்கு வெளியே பொதுமக்கள் நின்று பார்ப்பதற்காக இருபுறமும் எல் இ டி திரையரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான விரிவான ஏற்பாடுகளை தமிழக பொதுப்பணித்துறை  மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


கருணாநிதி நினைவிடத்தின் சிறப்பம்சங்கள்:


நினைவிடப் பிரதான நுழைவு வாயிலில், நுழையும் போதே ஏற்கனவே உள்ள தூண்கள் புதுப்பிக்கப்பட்டு அதில் கலைஞர் மற்றும் அண்ணாவின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. இரண்டு புறமும் திருவள்ளுவர் மற்றும் கம்பர் சிலைகள் நிறுவப்பட்டு உள்ளே வரவேற்பது போல் அமைக்கப்பட்டுள்ளன. 




திராவிட ஆட்சியில் செய்த அதிநவீன திட்டங்கள் மற்றும் பல்வேறு தலைவர்களின் சாதனைகளை நினைவு கூறும் வகையில் நினைவிடங்களின் உள்ளேயே அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டுள்ளன. உரிமைப் போராளி மற்றும் கலைஞரின் எழிலோவியம் என்ற பெயரில் அறைகள் கட்டப்பட்டுள்ளன. கலைஞரின் எழிலோவியம் என்ற அறையில் கருணாநிதியின் வாழ்க்கையில் நிகழ்ந்த வரலாற்று சாதனைகளை புகைப்படங்கள்  விளக்கும் விதத்தில்  இடம் பெற்றுள்ளன. இது மட்டுமல்லாமல் கோபாலபுரத்தில் கருணாநிதி அமர்ந்திருப்பது போன்ற தோற்றத்தில் சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளது.


அதன் அருகில் நின்று பொதுமக்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டால் சில நிமிடங்களில் புகைப்படம்  கிடைப்பது போன்ற ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கலை அறிஞர் கலைஞர் என்ற அறையில் இருபுறமும் இருக்கைகள் அமைக்கப்பட்டு அதில் கலைஞரின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான முக்கிய வரலாற்று சிறப்புகள் குறித்த 20 நிமிடங்களில் ஒரு வரலாற்று ஆவண படமாக காட்சியகப்படுத்தப்பட்டுள்ளன. 


கலைஞரின் நினைவிடத்தில் ஓய்வில்லாமல் உழைத்துக் கொண்டிருப்பவர். இங்கு ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார் என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளன. கலைஞரின் புத்தகங்கள் ஏஐ தொழில்நுட்பத்தில் காட்சியகப்படுத்தப்பட்டுள்ளன.இதனை பொதுமக்கள், பார்வையாளர்கள் தொட்டுப் பார்க்கும்போது அந்த புத்தகத்தின் குறிப்புகள் அவரின் சிறப்புகள் மற்றும்  சாதனைகளை விளக்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

சமீபத்திய செய்திகள்

news

CSK Vs MI: சேப்பாக்கத்தில் அசத்திய சென்னை சூப்பர் கிங்ஸ்.. பிரமாத வெற்றி.. கார்த்திக் சர்மா அபாரம்!

news

Tamil Nadu Results 2026: தேர்தல் ரிசல்ட் 2 நாட்களில்... 'வார் ரூம்களை' வலுப்படுத்தும் திமுக - அதிமுக

news

என்னாச்சு இவங்களுக்கு? இப்படி பேசுறாங்க... அப்போ ரிசல்ட் அப்படி தான் இருக்குமா?

news

Cell Broadcast Alert System: உங்க செல்போனில் சத்தத்துடன் மெசேஜ் வந்தா பயப்படாதீங்க.. டெஸ்ட்டிங்!

news

பசுமை மாறா நினைவுகள்.. நாவல் பழமும்.. ஆற்றில் அடித்துக் கொண்டு போன மரமும்!

news

அடிக்கிற வெயிலுக்கு.. டென்ஷனாகாதீங்க பாஸ்.. இந்த ஜோக்ஸ் படிங்க.. ஜில்லுனு ஆயிடுவீங்க!

news

கண்ணும் கண்ணும் நோக்கினால்!

news

அனல் பறக்கத் தொடங்கியுள்ள .. மே மாதம்.. என்னவெல்லாம் காத்திருக்கு தெரியுமா?

news

ஆப்பிளை சுவைத்தபடி.. ராவி ஆற்றங்கரை ஓரமாக.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 4)

அதிகம் பார்க்கும் செய்திகள்