சென்னை: காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவராக விளங்கும் ராகுல்காந்தி, தனிப்பட்ட முறையில் என்மீது காட்டும் அன்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நான் ராகுல் காந்தியை அருமைச் சகோதரர் என்றே குறிப்பிடுவேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் ராஜா சொக்கரின் இல்லத் திருமண விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,
சுயமரியாதை உணர்வுடன் நடைபெற்ற இந்தத் திருமணம் சமூக மாற்றத்தின் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இதுபோன்ற சீர்திருத்த மற்றும் சுயமரியாதை திருமணங்களுக்கு முன்னதாக சட்ட அங்கீகாரம் இல்லாமல் இருந்தது. ஆனால் 1967ஆம் ஆண்டு அண்ணா தலைமையிலான திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, இத்தகைய திருமணங்கள் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவராக விளங்கும் ராகுல்காந்தி, தனிப்பட்ட முறையில் என்மீது காட்டும் அன்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நான் ராகுல் காந்தியை அருமைச் சகோதரர் என்றே குறிப்பிடுவேன். காரணம் அவர் எப்போது என்னுடன் பேசினாலும் My Dear Brother என்றே அழைப்பார். திமுக, காங்கிரஸ் உறவு நிச்சயம் இந்தியாவை காப்பாற்றும். ராகுல்காந்தி என்மீது காட்டும் தனிப்பட்ட அன்பு அளவு கடந்தது.
திமுகவும், காங்கிரசும் ஒரு காலத்தில் வெவ்வேறு பாதைகளில் பயணித்தன. ஆனால் நாட்டு நலன் கருதி திமுகவும், காங்கிரசும் தற்போது ஒரே அணியில் பயணித்து வருகின்றன. திமுக, காங்கிரஸ் உறவு, அரசியல் உறவாக மட்டுமல்லாமல் கொள்கை உறவாகவும் வலுப்பெற்று இந்தியாவின் குரலாக எதிரொலிக்கிறது. சுயமரியாதை திருமணத்துக்கு திமுக ஆட்சியில் சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு... அதிகாலையில் பனிமூட்டமும் இருக்குமாம் - IMD
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு.. எதுக்காக?
விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக் கொள்பவர்களுடன் கூட்டணி: தவெக கூட்டத்தில் தீர்மானம்
சூடுபிடிக்கும் சட்டசபை தேர்தல் பணிகள்.. டிசம்பர் 15 முதல் அஇஅதிமுக விருப்பமனு!
சுப்ரியா சாகு அவர்களுக்கு ஐ.நா. விருது.. தமிழ்நாடு பெருமை கொள்கிறது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
பாரதி இன்று இருந்திருந்தால், பிரதமருக்கு வாழ்த்துப் பாடல் பாடியிருப்பார் - தமிழிசை சௌந்தரராஜன்
சாதிவாரி கணக்கெடுப்பு போராட்டத்துக்கு வாங்க... பாமக நிர்வாகிகள் நேரில் சென்று தவெகவிற்கு அழைப்பு
98 அடி உயரத்துக்கு சுனாமி அலைகள் எழும்.. ஜப்பான் அரசு வெளியிட்ட எச்சரிக்கை.. பின்னணி என்ன?
தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்... இன்றைய விலை நிலவரம் இதோ
{{comments.comment}}