அன்னையர் தினம்.. அன்னை இன்றி அமையாது உலகு!

May 09, 2025,03:06 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


"அன்னை இன்றி அமையாது உலகு".. அம்மா... என்ற ஒரு சொல் மந்திரம் .அன்பு, அரவணைப்பு ,அதிக அக்கறை, பாசம் ,தியாகம் நேர்மறை ஆற்றல் என அனைத்து உணர்வுகளையும் பெறக்கூடிய ஒரே ஆலயம் அம்மா .


"அடிமுடி தேடிப்பார் அகராதியை புரட்டிப்பார் முழுமையான அர்த்தம் அறிய முடியாத உயிர் சித்திரம் அம்மா" .. நாம் பசி என்று வார்த்தைகளால் கூறத் தேவையில்லை நம் முகத்தைப் பார்த்து அறிந்து புரிந்து கொண்டு உணவளிக்கும் அன்னபூரணி  ... அம்மா.


இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம் (Mother's day) கொண்டாடப்படுகிறது. 


அம்மாவைப் பற்றி சில வரிகள்:




உயிரை வருத்தி உயிர் கொடுத்தவள்; உதிரம் பெருக்கி உருவம் கொடுத்தவள் ;உடல் வருத்தி உணவு கொடுத்தவள்; தன் உறக்கம் மறந்து உறங்கச் செய்தவள் ;நாம் உலகம் உணர உயிரையும் தருபவள் நம் தாய்.


உயிருக்குள் அடைகாத்து, உதிரத்தை  பாலாக்கி , பாசத்தில் தாலாட்டி, பல இரவுகள் தூக்கத்தை தொலைத்து ,நமக்காகவே வாழும் அன்பு தெய்வம் அன்னை.


நம்மை கருவில் சுமந்ததிலிருந்து அம்மாவின் அன்பும், கவனிப்பும் நமது முதல் பாதுகாப்பு உணர்வாக மாறும். நம்மை அரவணைப்பதிலும் இந்த அன்பு தான் வலிமையாக மாறும். வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் நம்முடன் நிற்கிறார் அம்மா.  வரம்பின்றி நேசிப்பவர்கள் அவர்களை வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு நாளும் மனதார கொண்டாடப்பட வேண்டியவர்கள்- "அன்னையர்"


அன்னையர் தினம் எப்போது? இருந்து கொண்டாடப்படுகிறது:


அன்னையர் தினம் பண்டைய காலத்தில் இருந்தே கொண்டாடப்பட்டு வருகிறது. கிரீஸ் மற்றும் ரோமில் மக்கள் தாய்மார்களை கொண்டாடியதற்கான பதிவுகள் உள்ளன. ஆனால் 1900ங்களில் முற்பகுதியில் தான் நவீன அன்னையர் தினம் தொடங்கியது .இதற்கு காரணம்  'அன்னா ஜார்விஸ்  ' என்பவர். 


ஜார்விஸின் அம்மா  ' அன் னா  ரீவிஸ் ஜார்விஸ்' ஒரு அமைதி ஆர்வலர் .அவரது அம்மா இறந்த பிறகு தன் அம்மாவை மட்டுமல்ல அனைத்து தாய்மார்களுக்கும் நன்றி கூறும் வகையில் அன்னையர் தினத்தை அதிகாரப்பூர்வ விடுமுறையாக மாற்ற கடுமையாக உழைத்தார். 1914 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி கு உட்ரோ வில்சன் அனைத்து தாய்மார்களையும் கௌரவிக்கும் ஒரு தேசிய விடுமுறையாக அறிவித்த போது அவரது முயற்சிகள் பலனளித்தன. பிறகு அந்த ஆண்டு அமெரிக்காவின் பல மாநிலங்களில் அன்னையர் தினம் கொண்டாட தொடங்கினர்.


அன்னையர் தினம் என்பது அம்மாக்கள் செய்யும் அனைத்திற்கும் நன்றி சொல்லும் ஒரு நாள் ஆகும். ஒரு நாள் மட்டும் போதுமா ?..நாம் வாழும் வரை அவரவர் அன்னைக்கு நன்றி சொல்லுங்கள்.


அமெரிக்காவில் அன்னையர் தினம் ஆண்டுதோறும் மே மாதத்தில் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. ஆஸ்திரேலியா மற்றும் கனடாவிலும் இது போன்றே கொண்டாடப்படுகிறது. ஆனால், பிற நாடுகளில் வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 2025 அன்னையர் தினத்தன்று பௌர்ணமி முழு நிலவு ஒளிரச் செய்யும் பெருமை உண்டு.


"அன்னையர் தின மலர்":


இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை கார்னேஷன்கள் : அன்னையர் தினமலர் என்பது வெள்ளை கார்னேசன் ஆகும்.  அன்னா ஜார்விஸ் வெள்ளை கார்னேசன் மலரை அதிகாரப்பூர்வ மலராக தேர்ந்தெடுத்தார். ஏனெனில் ,அது அவரது தாயாருக்கு மிகவும் பிடித்த மலர் .தாயின் அன்பைக் குறிக்கும் வெள்ளை கார்னேசன் மலர். அவை மரணத்தையும், இறந்த தாயையும் குறிக்கின்றன. உயிர் உள்ள தாயை கௌரவிக்க சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிற கார்னேசன் மலர்களை தேர்வு செய்யவும்.


அன்னையை எப்படி கவுரவிக்கலாம்?


அம்மா விரும்பும் ஒன்றையாவது செய்யுங்கள். அவள் வாழ்நாளில் எதற்கும் ஆசைப்படாமல் பிறர் நலனுக்காக வாழ்பவள். அவரவர் வசதிக்கு ஏற்ப ஏதாவது ஒரு பரிசு பொருள் கொடுக்கலாம். அது அவளுக்கு பிடித்த உடை ,நகை மற்றும் பிடித்தமான பொருட்கள் இவற்றுள் அடங்கும்.


காலம் முழுதும் சமையலறையில் இருக்கும் அம்மாவை எங்காவது வெளியில் அழைத்துச் செல்லுங்கள். உணவு வாங்கிக் கொடுக்கலாம் .அம்மா.. நீ உட்கார்ந்து சாப்பிடு என்று கூறும் ஒரு வரி போதும், அவள் உச்சி முதல் பாதம் வரை குளிர்ந்து மகிழ்ச்சி அடைவாள் .அம்மா உனக்கு என்ன பிடிக்கும் என்ற ஆசையுடன் அன்புடன் கேட்டுப்பாருங்கள். அம்மா இருப்பவருக்கு அவள் ஒரு பொக்கிஷம்.


இல்லாதவர்களுக்கு அவள் மேலே இருந்து ஆசீர்வதிப்பார். அன்னைக்காக அன்னையை நினைத்து அன்னையர் தினத்தன்று பிரார்த்தியுங்கள்.  அன்னையர் தினத்தன்று அன்னையை மட்டுமல்ல தந்தையையும் சேர்த்து சந்தோஷப்படுத்துங்கள். மேலும் இணைந்து தொடர்ந்து இருங்கள் தென் தமிழுடன். வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

குள்ளி -- சிறுகதை

news

2026ல் திமுக - தவெக இடையே தான் பேட்டி... அதிமுகவிற்கு 3வது இடம் தான் : டிடிவி தினகரன் பேட்டி!

news

Delayed Sleep causes heart attack: தாமதமான தூக்கம் இதயத்தை எப்படி பாதிக்கிறது?.. டாக்டர்கள் அட்வைஸ்!

news

அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கேட்ட கேள்வி.. திமுகவை நோக்கி திருப்பி விடும் அதிமுக!

news

நெல்லையில் தோற்றால் பதவிகள் பறிக்கப்படும்: மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

news

2 நாள் சரிவிற்கு பின்னர் இன்று மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை... இன்று சவரனுக்கு ரூ.560 உயர்வு!

news

Bihar Assembly elections: களத்தைக் கலக்கும் இளம் புயல் மைதிலி தாகூர்.. அதிர வைக்கும் யூடியூபர்!

news

பீகாரில் விறுவிறுப்பான சட்டசபைத் தேர்தல்.. சுறுசுறுப்பான முதல் கட்ட வாக்குப் பதிவு

news

அன்புமணியை மத்திய அமைச்சர் ஆக்கியது தவறு.. டாக்டர் ராமதாஸ் பரபரப்பு பேட்டி

அதிகம் பார்க்கும் செய்திகள்