டெல்லி: காங்கிரஸ் துவக்க உள்ள பாரத் ஜோதா நியாய யாத்திரைக்கு நிதி அளிப்பதற்காக கட்சி மேலிடம் அறிவித்த லிங்க், வேறு ஒரு கணக்குக்குப் போனதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் மேலிடம் தவறான லிங்க்கைக் கொடுத்ததால் வந்த வினை இது.
பாரத் ஜோதா நியாய யாத்திரை என்ற பாத யாத்திரையை ஜனவரி 14ம் தேதி மணிப்பூரில் இருந்த துவங்க போவதாக காங்கிரஸ் கட்சி சமீபத்தில் அறிவித்திருந்தது. மொத்தம் 6713 கி.மீ., தூரம் கொண்ட இந்த யாத்திரை 100 லோக்சபா தொகுதிகள், 337 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியதாக இருக்க போகிறது. மொத்தமாக 110 மாவட்டங்கள் வழியாக இந்த யாத்திரை நடைபெற உள்ளது. இந்த யாத்திரையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் மட்டுமின்றி இந்தியா கூட்டணியை சேர்ந்த கூட்டணி கட்சி தலைவர்கள் பலரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
லோக்சபா தேர்தல் நடைபெற இன்னும் 3 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் மத்தியில் ஆளும் பாஜக.,விற்கு எதிராக வன்முறையால் கடுமையாக பாதிக்கப்பட்ட மணிப்பூரில் இருந்து காங்கிரஸ் யாத்திரை துவங்குவது தேசிய அரசியலில் மிகப் பெரிய தாக்கத்தையம், அதிர்வலையையும் ஏற்படும் என மக்களிடம் அதிக எதிர்பார்ப்பு எழுந்திந்துள்ளது.
காங்கிரசின் பாரத் ஜோதா நியாய யாத்திரைக்கான ரோட் மேப் மற்றும் துண்டு பிரசுரத்தை காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேசும் வேணுகோபாலும் டில்லியில் நேற்று வெளியிட்டனர். இந்த துண்டு பிரசுரத்தில் bharatjodonyayyatra.com, donateinc.in போன்ற இணையதள முகவரிகளும், மிஸ்ட் கால் கொடுப்பதற்காக 9891802024 என்ற எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது. இதோடு சோஷியல் மீடியா லிங்க்கள் சிலவும் கொடுக்கப்பட்டு, இதற்கு கீழ் கை சின்னத்துடன் இருக்கும் QR code ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது.
அதாவது இந்த இணையதள முகவரிகள் உள்ளிட்ட லிங்குகளை கிளிக் செய்தும், QR code scan செய்தும் இந்த யாத்திரை குறித்த விபரங்களை அறிந்து கொள்வதுடன், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்கும் வகையில் நன்கொடையும் அளிக்கலாம். ஆனால் donateinc.co.in இணையதளத்துக்கு QR code scan செய்து நன்கொடை அளித்தால் அந்த தொகை "Roj Cash" என்ற கணக்குக்குச் சென்றது. காங்கிரஸ் கணக்குக்கு அது போகவில்லை.
இதனால் நன்கொடை அளித்தோர் குழப்பமானார்கள். காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் அல்லது தொண்டர்கள் அளிக்கும் நன்கொடை மூன்றாம் நபரின் கணக்கிற்கு எதற்காக செல்ல வேண்டும்? யார் அந்த மூன்றாம் நபர்? காங்கிரஸ் எதற்காக அவர்களுக்காக யாத்திரை நடத்தி நிதி திரட்ட வேண்டும்? என்பத உள்ளிட்ட பல சந்தேக கேள்விகள் எழுந்தன. ஆனால் நன்கொடை செலுத்துவதற்கான டொமைனை காங்கிரஸ் கட்சி முன்பே பதிவு செய்யாமல் விட்டதால் ஏற்பட்ட குழப்பம் இது என்று இப்போது தெரிய வந்துள்ளது.
ஒரு தடவைக்கு நாலு தடவை செக் பண்ணிட்டு எதையும் செய்யுங்கப்பா.. !
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}