டெல்லி: மத்திய அரசு அமைத்துள்ள 7 எம்.பிக்கள் தலைமையிலான குழுவில் இடம் பெற மத்திய அரசு விடுத்த கோரிக்கையை ஏற்று லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி நான்கு பேர் கொண்ட பட்டியலைக் கொடுத்துள்ளார். ஆனால் அந்தப் பட்டியலில் இடம் பெறாத சசிதரூரை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் தீவிரவாத ஆதரவுப் போக்குக்கு எதிரான நடவடிக்கையாக பல்வேறு வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க 7 எம்.பிக்களைக் கொண்ட குழுக்களை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இந்தக் குழுவில் சசி தரூர், கனிமொழி கருணாநிதி, சுப்ரியா சுலே, ரவிசங்கர் பிரசாத், பைஜெயந்த் பாண்டா, சஞ்சய் குமார் ஜா, ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்ட ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்தப் பட்டியலில் இடம் பெறுவதற்காக ஒவ்வொரு கட்சியிடமிருந்தும் பெயர்களைக் கேட்டு மத்திய அரசு அணுகியுள்ளது. அந்த அடிப்படையில் காங்கிரஸ் கட்சியிடமும் இதுகுறித்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் போட்டுள்ள எக்ஸ் பதிவில், நேற்று காலை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரன் ரிஜிஜு, நான்கு பேர் கொண்ட பெயர்ப் பட்டியலைத் தருமாறு காங்கிரஸ் தலைவர் மற்றும் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்குத் தகவல் தெரிவித்தார். இதையடுத்து அன்று பிற்பகலுக்குள் நான்கு பேர் கொண்ட பட்டியல் தரப்பட்டு விட்டது. அந்த நான்கு பேர் பெயர்கள் வருமாறு:
ஆனந்த் சர்மா (முன்னாள் மத்திய அமைச்சர்), கெளரவ் கோகாய் (லோக்சபா காங்கிரஸ் துணைத் தலைவர்), டாக்டர் சையத் நாசர் ஹுசேன் (ராஜ்யசபா எம்.பி), ராஜா பிரார் (லோக்சபா எம்.பி) என்று அதில் அவர் தெரிவித்திருந்தார். இந்தப் பட்டியலில் சசி தரூர் பெயர் இடம் பெறவில்லை. இந்த நிலையில் மத்திய அரசு சசி தரூர் பெயரை ஒரு குழுவுக்குத் தலைவராக அறிவித்து விவரம் வெளியிட்டுள்ளது. இது தற்போது பேசு பொருளாகியுள்ளது.
சசி தரூர் பெயரை காங்கிரஸ் ஏன் பட்டியலில் சேர்க்கவில்லை என்றும் தெரியவில்லை. அதேபோல காங்கிரஸ் கொடுத்த பட்டியலில் இல்லாத சசி தரூரை மத்திய அரசு ஏன் தேர்வு செய்தது என்றும் தெரியவில்லை. இரு தரப்புமே இதுதொடர்பாக விளக்கவில்லை.
சமீப காலமாகவே காங்கிரஸ் தலைமைக்கும் சசி தரூருக்கும் இடையே உரசல் இருந்து வருகிறது. சசி தரூரின் செயல்பாடுகள் பலமுறை விமர்சனத்துக்குள்ளாகியுள்ளன. குறிப்பாக அவர் பிரதமர் மோடிக்கு ஆதரவாக செயல்படுவதாக காங்கிரஸ் கட்சிக்குள் அதிருப்தி நிலவி வருகிறது. இந்த நிலையில் தற்போது தாங்கள் பரிந்துரைக்காத சசி தரூரை மத்திய அரசு தேர்வு செய்துள்ளதால் காங்கிரஸ் கட்சி அதிர்ச்சி அடைந்துள்ளது.
இதற்கிடையே, தன்னை மத்திய அரசு தேர்வு செய்திருப்பது கெளரவத்தைக் கொடுப்பதாகவும், மகிழ்ச்சியுடன் இதை ஏற்பதாகவும் சசி தரூர் தெரிவித்துள்ளார். தேசத்திற்கு கடமையாற்ற தான் தேவைப்படும்போது நிச்சயமாக அதை நான் மனமுவந்து செய்வேன் என்றும் சசி தரூர் தெரிவித்துள்ளார்.
திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
திருப்புவனம் அஜித்குமார் மரணம்: நாளை மறுநாள் தவெக கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்புவனம் இளைஞர் மரண வழக்கு: தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்: நீதிபதிகள்
Thiruppuvanam Custodial Death: அஜித்குமார் மரணம்.. எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்!
ஜூலை பிறந்தாச்சு.. இன்று முதல் இந்த மாற்றங்கள் அமலுக்கும் வந்தாச்சு.. நோட் பண்ணிக்கங்க!
தவெகவின் யானை சின்னத்தை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்த வழக்கு... ஜூலை 3ல் தீர்ப்பு
வயசு 22தான்.. ஸ்டூண்ட்டாக நடித்த டுபாக்கூர் இளைஞர்.. 22 மெயில்களை கிரியேட் செய்து அதிரடி!
வலப்புறத்தில் அம்பாள்.. நுரையால் உருவான விநாயகர்.. திருவலஞ்சுழிநாதர் திருக்கோவில் அற்புதம்!
சிரித்தபடி சில்லறை தரும் கண்டக்டர்.. ஆச்சரியப்படுத்திய காரைக்குடி பஸ் அனுபவம்!
{{comments.comment}}