பாஜகவில் சேரும் நிலைக்கு என்னைத் தள்ளி விட்டுள்ளது காங்கிரஸ்.. விஜயதரணி பேச்சு!

Feb 24, 2024,05:50 PM IST
டெல்லி: எதிர்பார்த்தது போல, காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்து விட்டார் விளவங்கோடு எம்எல்ஏ விஜயதரணி. இதனால் அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது.

காங்கிரஸ் சார்பில் மூன்றாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருபவர் எம்எல்ஏ விஜய தரணி. கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு எம்எல்ஏவாக இருப்பவர். தற்போது காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற முதன்மை கொறடாவாக இருந்தும் வந்தார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டவர் எச்.வசந்தகுமார். இவர் கொரோனா தொற்றால் காலமானார். அதன் பிறகு கன்னியாகுமரி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அதில் தற்போது எம்எல்ஏவாக உள்ள விஜயதரணி வாய்ப்பு கேட்டார். ஆனால் காங்கிரஸ் தொகுதியை ஒதுக்க மறுத்துள்ளது. இதனால் தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையின் மீது விஜயதாரணி  அதிருப்தியில் இருந்து வந்தார்.





இதனால் அதிருப்தியுடன் இருந்து வந்த விஜயதரணி, கட்சி நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாமல் ஒதுங்கியே இருந்தார். இந்தநிலையில், சமீபகாலமாக எம் எல் ஏ விஜயதரணி காங்கிரஸ் கட்சிகளிலிருந்து விலகி பாஜகவில் இணைவதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இதற்காக கடந்த இரண்டு வாரங்களாக டெல்லியில் முகாமிட்டு வந்துள்ளார்.

ஆனால் இதை சமீபத்தில் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற செல்வப்பெருந்தகை மறுத்தார். விஜயதரணி பாஜக வலையில் சிக்க மாட்டார். வழக்கு ஒன்றுக்காகத்தான் அவர் டெல்லி போயுள்ளார் என்று கூறி வந்தார். இந்த நிலையில்தான், மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தலைமையில் இன்று பாஜகவில் இணைந்தார் விஜயதரணி.

தற்போது பாஜகவில் இணைந்துள்ள எம்எல்ஏ விஜயதரணிக்கு மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்தார்.  இரண்டு நாள் பயணமாக வரும் பிப்ரவரி 27ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியுடன் விஜயதாரணியும் பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தான் சிறு வயது முதலே காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்ததாகவும், தன்னை பாஜகவில் சேரும் நிலைக்கு காங்கிரஸ் தள்ளி விட்டுள்ளதாகவும் கூறியுள்ளார் விஜயதரணி. 

சமீபத்திய செய்திகள்

news

வட நாட்டு அரசியலில் திருப்பம் வரப் போகிறது.. ரஜினி சொன்னதாக வைரமுத்து தகவல்!

news

அம்மா ஜெயலலிதா இருந்த இடத்தில் தற்போது மோடி இருக்கிறார்: டிடிவி தினகரன் பேட்டி!

news

தவெக தலைவர் வாயில் வடை சுடுகிறார்.. இவருக்கு என்ன அவ்வளவு பெரிய கூட்டமா?-செல்லூர் ராஜூ விமர்சனம்!

news

பனையூர் பண்ணையார் அவர்களே.. விஜய்யை நோக்கி அதிரடியாக திரும்பிய அதிமுக..!

news

சிக்கலில் தொக்கி நிற்கும் ஜனநாயகன்.. இந்த இயக்குநர் கேமியோவில் வர்றாராமே!

news

ஊழலும் இல்லை, தீய சக்தியும் இல்லை; அதனால்தான் விஜய் எங்களை விமர்சிக்கவில்லை - நயினார் நாகேந்திரன்

news

77-வது குடியரசு தினம்.. சென்னை மெரினாவில் தேசியக் கொடியேற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி

news

நான் என்ன சொல்ல வந்தேன்னா.. விசிக குறித்துப் பேசியது தொடர்பாக.. ஆதவ் அர்ஜூனா விளக்கம்!

news

தஞ்சையில் திமுக மகளிர் அணி மாநாடு: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்