டெல்லி: காங்கிரஸ் குழு கூட்டம் இன்று பிற்பகல் 2:30 மணிக்கு டெல்லியில் நடைபெற உள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டுத் தொடர் கடந்த நவம்பர் 25 ஆம் தொடங்கி டிசம்பர் 20ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா கூட்டணி சேர்ந்த எதிர்க்கட்சியினர் அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம், சம்பல் துப்பாக்கி சூடு உள்ளிட்டவை குறித்து பல்வேறு கருத்துக்களை முன்வைத்தனர். ஆனால் இந்த கருத்துக்கள் எதையும் மத்திய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை என தெரிகிறது. அப்போது தொடர்ந்து எதிர்க்கட்சியினர் அமலியில் ஈடுபட்டதால் இரண்டு முறையும் ராஜ்யசபா லோக்சபா என இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
இந்த நிலையில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இன்று பிற்பகல் 2:30 மணி அளவில் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி காங்கிரஸ், பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, உட்பட பல்வேறு செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர். இந்தக் கூட்டத்தில் மக்களவையில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள், தற்போதைய அரசியல், பொருளாதார பிரச்சினைகள், குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.
அதே சமயத்தில் அடுத்த ஆண்டு வரும் டெல்லி சட்டசபை தேர்தல் குறித்தும் விவாதிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. காங்கிரஸ் எம்பியாக பிரியங்கா காந்தி பதவியேற்ற பிறகு காங்கிரஸ் சார்பில் நடைபெறும் முதல் காரியக் கமிட்டி கூட்டம் இதுவே என்பது நினைவிருக்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஒரே படம்தான்..ஹீரோவானார் டூரிஸ்ட் பேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்..சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பு!
டிரம்ப் வரியால் விபரீதம்..பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு..2 நாட்களில் ரூ. 9.69 லட்சம் கோடி இழப்பு
திமுக - தேமுதிக கூட்டணிக்கு வேட்டு வைக்குமா.. தனலட்சுமி சீனிவாசன் கிட்னி முறைகேடு விவகாரம்?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 29, 2025... இன்று இவர்களின் வாழ்க்கையே மாற போகுது
அமெரிக்க வரி விதிப்பின் எதிரொலியாக.... ரூ.3000 கோடி ஏற்றுமதி பாதிப்பு: முதல்வர் மு.க. ஸ்டாலின்!
மாஸ் காட்டும் எடப்பாடி பழனிச்சாமி...அதுக்குள்ள இவ்வளவு விஷயம் பண்ணிட்டாங்களா?
PM Modi Japan Visit: 7 ஆண்டுகளுக்கு பிறகு ஜப்பான் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி
மோடி தலைமையிலான மத்திய அரசு திமுக அரசை விட முன்னோடியாக செயல்படுகிறது: அண்ணாமலை தாக்கு!
மிகப்பெரிய தொழில்துறை பணியாளர்களைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு.. டி.ஆர்.பி. ராஜா பெருமிதம்
{{comments.comment}}