மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக .. எம்.ஏ. பேபி தேர்வு!

Apr 06, 2025,04:05 PM IST
மதுரை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் எம்.ஏ. பேபி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மதுரையில் நடந்த 24வது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் பேபி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்து வந்த சீதாராம் எச்சூரி சமீபத்தில் மரணமடைந்தார். இதையடுத்து காலியான அந்தப் பதவிக்கு எம்.ஏ. பேபி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சிபிஎம் கட்சியின் அகில இந்திய மாநாடு, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இந்த முறை மதுரையில் மாநாடு நடைபெற்றது. இன்றுடன் மாநாடு முடிவடையும் நிலையில் இன்று கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் தேர்வு நடைபெற்றது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், எம்.ஏ. பேபியின் பெயரை முன்மொழிந்தார். இதையடுத்து எம்.ஏ. பேபியின் தேர்வு  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.



மத்திய குழு - பொலிட்பீரோவுக்கு புதிய உறுப்பினர்கள்

இன்றைய மாநாட்டின் மற்ற முக்கிய நிகழ்வாக, 84 உறுப்பினர்களைக் கொண்ட மத்திய குழுவும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய மத்திய குழுவில் தமிழ்நாட்டிலிருந்து கே.பாலகிருஷ்ணன், பெ. சண்முகம், பாலபாரதி, பி.சம்பத், உ.வாசுகி, என். குணசேகரன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். புதிய மத்தியக் குழு, 18 பேர் கொண்ட புதிய பொலிட்பீரோ உறுப்பினர்களைத் தேர்வு செய்துள்ளது. புதிய பொலிட்பீரோ குழுவில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள் விவரம்:

பினராயி விஜயன், பி.வி. ராகவலு, எம்.ஏ. பேபி, தபன் சென், நிலோத்பல் பாசு, முகம்மது சலீம், ஏ. விஜயராகவன், அசோக் தவலே, ராமச்சந்திர டோமே, எம்.வி. கோவிந்தன், அம்ரா ராம், விஜூ கிருஷ்ணன், மரியம் தவலே, உ. வாசுகி, கே.பாலகிருஷ்ணன், ஜிதேந்திரா செளத்ரி, ஸ்ரீதீப் பட்டச்சார்யா, அருண் குமார்.

70 வயதாகும் பேபி, கேரளாவைச் சேர்ந்தவர். முன்னாள் எம்.பி.  சிபிஎம்மின் மாணவர் பிரிவான  இந்திய மாணவர் சம்மேளனம்,  பின்னர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆகியவற்றில் தீவிரமாக செயல்பட்டவர். 1986 முதல் 1998 வரை ராஜ்யசபா எம்.பியாக இருந்தவர். கேரள மாநில அமைச்சராக இருந்துள்ளார்.

கேரளாவிலிருந்து சிபிஎம் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக இதற்கு முன்பு இஎம்எஸ் நம்பூதிரிபாடு இருந்துள்ளார். அவருக்குப் பின்னர் தற்போது 2வது கேரள தலைவராக எம்.ஏ. பேபி உருவெடுத்துள்ளார். இந்தியாவில் தற்போது கேரளாவில் மட்டுமே இடதுசாரிகளின் ஆட்சி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழக கோயில்களில் புதிய கட்டுப்பாடுகள்: செப்டம்பர் 01 முதல் செல்போன்களுக்குத் தடை

news

முதல்வர் விஜய் தலைமையில் தமிழக எம்பி.,க்கள் கூட்டம்: 37 எம்.பி.க்கள் புறக்கணிப்பு

news

முதல்வர் விஜய் அழைப்பு விடுத்த எம்.பிக்கள் கூட்டம்.. திமுக, அதிமுக புறக்கணிப்பு.. தேமுதிகவும் வராது

news

கரூர் அரசுப் பணி ரத்து வழக்கு: வரும் 14-ல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு விசாரணை

news

இலங்கை டெஸ்ட் தொடர்: காயத்தால் சாய் சுதர்சன் விலகலா?

news

‘ஃபார்ச்சூன்’ நிறுவனத்திற்கு அபராதம்: தரம் குறைந்த எண்ணெய் விற்பனையால் நடவடிக்கை

news

10 நிமிட டெலிவரி ஆப்களும்... ஓவர் 'ஸ்மார்ட்' வாடிக்கையாளர்களும்!

news

செக் மோசடி வழக்கு: நடிகர் சரத்குமார் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

news

கத்திக் கரைகிறது கூட்டமாக சேர்ந்து

அதிகம் பார்க்கும் செய்திகள்