சென்னை: அரபிக் கடலில் தேஜ் புயல் உருவாகி தற்போது ஏமன் நாட்டைக் கடந்துள்ள நிலையில், வங்கக் கடலில் அதி தீவிர புயலாக உருவெடுத்துள்ளது ஹாமூன். இந்தப் புயலானது வங்கதேசத்தில் கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
புயலைத் தொடர்ந்து சென்னை எண்ணூர் துறைமுகத்தில் 2ம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
ஹாமூன் புயல் அதி தீவிர புயலாக உருமாறியுள்ளது. புயலைத் தொடர்ந்து சென்னை, கடலூர், நாகை, எண்ணூர் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 2ம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டுள்ளது. ஒடிசாவிற்கு கிழக்கு, தென்கிழக்கில் 210 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ள புயல் நாளை நண்பகலில் ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வங்கதேசத்தின் சிட்டகாங் அருகே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரையில் அதிகளவிலான மழைப்பொழிவை ஏற்படுத்தும் வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தற்போது தொடங்கி உள்ளது. ஹாமூன் புயலால் தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ள கடற்கரை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. மேலும் பலத்த சூறவாளி காற்றும் வீசிவருவதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் வலுப்பெற்று வருவதை முன்னிட்டு 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}