- மஞ்சுளா தேவி
சென்னை: வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறியுள்ளது. அந்தப் புயலுக்கு மிதிலி என்று பெயரிடப்பட்டுள்ளது.
கடந்த மாதம் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு இடங்களில் பரவலாக கன மழை பெய்தது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை காலத்தில் முதல் முறையாக ஒரு புயல் வங்கக் கடலில் உருவாகியுள்ளது. இந்த புயலுக்கு மாலத்தீவு பரிந்துரைத்த மிதிலி என பெயரிடப்பட்டது.
மிதிலி புயல் விசாகப்பட்டினத்தில் இருந்து கிழக்கு- தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளது. இது மேலும் வலுவடைந்து வடக்கு திசை நோக்கி நகர்ந்து நாளை அதாவது 18ஆம் தேதி வங்கதேசம் அருகே கரையை கடக்கும். அப்போது மணிக்கு 60 முதல் 70 வரை சூரைக்காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மிதிலி புயல் காரணமாக,தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.
இன்று எங்கெல்லாம் மழை பெய்யும்:
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாவட்டங்களில் இன்று பரவலாக கன மழை பெய்யக்கூடும். குறிப்பாக ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை ,குமரி நெல்லை ,தூத்துக்குடி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவித்துள்ளது.
சென்னையை பொருத்தவரை, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}