சென்னை: வங்கக் கடலில் மே 22ம் தேதி உருவாகும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையானது தொடர்ந்து வலுப் பெற்று புயலாக மாறக் கூடும். ஆனால் அது நம்மிடமிருந்து தொலை தூரத்திற்குப் போய் விடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
தென் மேற்குப் பருவ மழை தொடங்கவுள்ளது. இந்த நிலையில் அதற்கான முஸ்தீபுகளில் இயற்கை இறங்கி விட்டது. தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் தற்போது மேலடுக்கு வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இதனால் மழை கிடைத்து வருகிறது.
இந்த வளிமண்டல சுழற்சியானது வங்கக் கடலில் மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு நிலையாக மே 22ம் தேதி மாறவுள்ளது. அதைத் தொடர்ந்து இது காற்றழுத்த மண்டலமாக 24ம் தேதி வலுப்பெறும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தற்போது ஒரு தகவல் வெளியிட்டுள்ளார் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்.

அவர் கூறுகையில், காற்றழுத்த மண்டலமானது மேலும் வலுப்பெற்று புயலாக மாறும். ஆனால் அது புயலாக மாறும்போது தமிழ்நாட்டை விட்டு வெகு தொலைவு போயிருக்கும். நம்மிடம் புயல் வராது. அதேசமயம், கன்னியாகுமரி மாவட்டத்தில் கவனம் வைக்க வேண்டும். தற்போதைய நிலையில் கன்னியாகுமரி, தென் கேரளாவில் நிறைய மழைக்கு வாய்ப்புள்ளது.
அதேபோல சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் நல்ல மழைக்கு வாய்ப்பிருக்கிறது என்று வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
2027 ஜனவரி முதல் மதுரை எய்ம்ஸ் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்கும்: மத்திய அரசு தகவல்
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது...எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்
பள்ளி அங்கீகார மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷிடம் நாளை விசாரணை
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் 2026: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
அரசிதழில் பெயரை மாற்றி திமுக எம்.பி., கனிமொழி...இனி இது தான் இவர் பெயர்
ஓங்கி ஒலித்த நிர்மலா சீதாராமன்.. ஓர் அற்புதமான நினைவுச் சுவடு!
ஆண்டுகள் பதினேழு ஆன பின்பு மீண்டுமொரு புனிதக் குளியல்.. மாமதுரை குடமுழுக்கு!
புரட்டாசி மாதத்தில் அசைவம் தவிர்க்க வேண்டும்.. காரணம் அறிவியலா.. ஆன்மீகமா?
Madurai Sourashtra recipe: சத்தான சுவையான.. கறுப்பு முழு உளுந்து சுண்டல்!
{{comments.comment}}