சென்னை: தமிழ்நாடு முழுவதும் இது பரீட்சை சீசன்.. அதாவது முழு ஆண்டுத் தேர்வுகள் நெருங்கி விட்டன. ஒரு வருட உழைப்பை பரீட்சித்துப் பார்க்கும் நேரம் இது. அதிலும் 10 மற்றும் 12வது வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்தான் ரொம்பவே டென்ஷனாக இருப்பார்கள்.
டென்ஷன் இருக்கும்தான்.. ஆனாலும் பயப்படாமல், ரிலாக்ஸ்டாக தேர்வுக்குத் தயாராகுங்கள். நிச்சயம் நன்றாகவே தயாராகியிருப்பீர்கள்.. நன்றாகவும் பரீட்சையை எழுதி முடிப்பீர்கள்.. நம்பிக்கையோடு ரெடியாகுங்க.. உங்களுக்காக கொஞ்சம் டிப்ஸ்.

திட்டமிடுதல்: பரீட்சைக்குப் படிக்க வேண்டிய பாடங்களை, ஒரு மாதிரி (Model) டைம் டேபிளை உருவாக்குங்கள். ஒவ்வொரு நாளும் எந்த பாடங்களை படிக்க வேண்டுமென திட்டமிடுங்கள்.
பயிற்சி: கடந்த ஆண்டு கேள்விப் பேப்பர்களை, மாதிரி கேள்வி தொகுப்புகளை படிக்கவும். இது உங்களுக்கு தேர்வு கேள்விகள் எப்படி வரும் என்ற ஒரு ஐடியா கிடைக்கும். தயாராவதற்கு எளிதாக இருக்கும்.
மன அழுத்தம் வேண்டாம்: மன அழுத்தம் இல்லாமல் படிக்கவும். மனதில் எந்த பதட்டத்தையும் வச்சுக்காதீங்க. அது முக்கியம். ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து படிக்காதீங்க. அவ்வப்போது குட்டி குட்டி பிரேக் எடுங்க. இது ரிலாக்ஸ்டாக உங்களை வச்சுக்க உதவும்.
குறிப்பெடுங்கள்: முக்கியமான புள்ளி விவரங்களை குறித்துக்கொள்ளுங்கள். பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு குறிப்புகளை தயாரிக்கவும். இது எளிதாக படிக்க உதவும். மனப்பாடம் செய்வதை விட இது எளிதாக மனதில் பதியும்.
சிறிய இலக்குகள்: பெரிய தலைப்புகளைச் சிறு பகுதிகளாகப் பிரித்து படிக்கவும். இதன் மூலம் பெரிய போர்ஷனை படிக்கணுமே என்ற பயம் போகும்.
குரூப் டிஸ்கஷன்: சக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருடன் அவ்வப்போது பேசுங்கள். அவர்களிடம் கஷ்டமான போர்ஷன் குறித்து டிஸ்கஸ் செய்யலாம். குரூப் டிஸ்கஷனும் கூட உதவும்.
ரிவிஷன்: படித்ததைப் பல முறை ரிவிஷன் விட்டபடி இருங்க. இது எந்த வகையிலும் நீங்கள் படித்தது மறந்து போகாமல் இருக்க உதவும்.
ரிலாக்ஸ் நேரம்: உங்கள் உடல் மற்றும் மனதுக்கு அவ்வப்போது ஓய்வு அளியுங்கள். அந்த இடைவெளியில் குட்டி தூக்கம் அல்லது பாட்டுப் பாடுவது, கேட்பது, டான்ஸ் ஆடுவது, வெளியில் சற்று இளைப்பாறுவது என்று ரிலாக்ஸாக இருக்க முயங்சியுங்கள்.
இறுதித் தேர்வு என்பது அத்தோடு எதுவும் முடியப் போவதில்லை. எனவே எதையும் நினைத்துப் பயப்படாமல், அதேசமயம் சற்று அக்கறை எடுத்துப் படித்தாலே போதும், நிச்சயம் நீங்கள் உங்களது இறுதித் தேர்வை சிறப்பாக எழுத முடியும். ஸோ, கவலைப்படாமல், பதட்டப்படாமல், பயப்படாமல் ஜாலியா படிங்க, ஜம்முன்னு தேர்வெழுதுங்க.
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. மூர்த்தி நாயனார்
அழகு மயில்!
மதியொளி முகமோ!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}