December.. எம்ஜிஆர் முதல் மன்மோகன் சிங் வரை.. மீண்டும் தனது குரூர முகத்தைக் காட்டிய டிசம்பர்!

Dec 27, 2024,06:22 PM IST

சென்னை : டிசம்பர் மாதத்திற்கு நம்முடைய இந்திய ஆளுமைகள் மீது அப்படி என்ன தான் தீராத கோபமோ தெரியவில்லை. நாட்டில் மிகச் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என ஆவலாக எதிர்பார்க்கப்பட்ட தலைவர்களை தேடி தேடி காலத்தின் கைகளில் கொடுத்து விடுகிறது இந்த டிசம்பர் மாதம். இதனால் டிசம்பர் மாதம் என்றாலே அது அழிவை தரும் மாதம் என்றே ஆகி விட்டது.


இந்தியாவின் மிக முக்கியமான தலைவர்களின் பிறப்பு வேறு வேறு மாதங்களில் நிகழ்ந்திருந்தாலும், இறப்பு என்பது என்னவோ சொல்லி வைத்தாற் போல் டிசம்பர் மாதத்தில் தான் நிகழ்ந்துள்ளது என்பதை இந்திய வரலாற்றில் மறுக்க முடியாத, மறக்க முடியாத விஷயமாகி விட்டது. 




தமிழக அரசியலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் என பல தலைவர்களும் காலமானது டிசம்பர் மாதத்தில் தான். ஒன்று சுனாமி போன்ற பேரழிவு, இல்லை என்றால் தலைவர்களின் மரணம் நிகழும் மாதம் என்றாகி விட்டது டிசம்பர் மாதம். டிசம்பர் மாதத்தில் ஏதாவது பெரிய சோகம் அல்லது பேரிழப்பு அல்லது மரணம் ஏற்படும் என்பது பல காலமாக நடந்தேறி வருவது மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகியோரின் மரணங்கள் மட்டுமல்ல அதற்கு முன்பும் முக்கிய தலைவர்கள் பலரும் டிசம்பர் மாதத்தில் மறைந்த சோக நினைவுகள் உண்டு. பெரியார், அம்பேத்கர், கக்கன் போன்ற பல தலைவர்களும் மறைந்தது டிசம்பர் மாதத்தில் தான். அந்த வரிசையில் தற்போது கடைசியாக இணைந்துள்ளது நம்முடைய முன்னாள் பிரதமரும், மிகப் பெரிய பொருளாதார மேதையுமான மன்மோகன் சிங். 


டிசம்பர்.. குளிர் + சோகத்தின் அடையாளம்.. அமைதியாக முடியுமா.. நிம்மதியாக பிறக்குமா 2025?


இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தின் துவக்கத்திலேயே தமிழகத்தின் மிக முக்கிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார். அந்த சோகத்தில் இருந்தே தமிழக காங்கிரஸ் மீண்டு வராத நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சியில் இந்திய அளவில் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவராகவும், அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த மன்மோகன் சிங்கும் மறைந்துள்ளது காங்கிரசிற்கு மிகப் பெரிய பேரிழப்பாக பார்க்கப்படுகிறது.


டிசம்பர் 5ம் தேதிதான் ஜெயலலிதா மரணமடைந்தார். பத்திரிகையாளரும், நடிகருமான சோ மறைந்ததும் இதே டிசம்பர் மாதத்தில்தான். இசைக் குயில் எம்.எஸ். சுப்புலட்சுமியின் மறைவு வந்ததும் ஒரு டிசம்பர் மாதத்தில்தான். மூதறிஞர் என்று போற்றப்பட்ட ராஜாஜி மறைந்ததும் கூட கிறிஸ்துமஸ் தினத்தன்றுதான்.


டிசம்பர் மாதம் இனிமையானது, குளுமையானது என்றுதான் எல்லோருக்கும் அது அடையாளமாக உள்ளது. ஆனால் அதை மாற்றிப் போடும் வகையில் குரூரமான மாதமாக அது மாறி வருவது  சோகம்தான்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

யார் குப்பைக்காரன்?

news

பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

டிங்டாங் டாங் டிங்டாங்.. இரண்டும் ஒன்றோடு ஒன்று.. அது ஏன் நிமிஷத்துக்கு 60 விநாடி?

news

தங்கம் விலை இன்று சற்று குறைந்தது ... வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.400 நோக்கி உயர்வு!

news

ஜனநாயகன் பட வழக்கை மீண்டும் தனி நீதிபதி விசாரிக்க சென்னை ஹைகோர்ட் உத்தரவு

news

பண்டைய தமிழர்களின் வாழ்வியல் தொகுப்பு.. ஆயகலைகள் 64 அறிவோமா?

news

மதுரையிலிருந்து ஏன் என்னை வம்புக்கு இழுக்கிறீர்கள்.. எம்.எல்.ஏ தளபதிக்கு ஜோதிமணி கேள்வி

news

தாடி பாலாஜி.. Nooo.. இனி பொதுச் செயலாளர் பாலாஜி.. புதுச்சேரியில் அடித்த லக்கி பிரைஸ்!

news

தமிழகத்தில் நாளை மிதமான மழை செய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்