- ஔவை அ.ர.தீபாரவி
கொஞ்சமல்ல
நிறையவே
நினைத்தாலே இனிக்கும் காலமது
நிலவு ஒளியில்
உறவுகளோடு
வாசலமர்ந்த
இரவது
கதைகேட்க நிறைய காதுகள்
காத்திருந்த நேரமது
யார்கூறுவது
யார்கேட்பது
யாருக்கும் தெரியாத பகிர்தலது
அன்றாடவாழ்வின்
அழகான நினைவுகளை
மீட்டும் இடமது

கூடிச்சோறு தின்ன எங்கோ
ஓடிப்போகும்
பசியது
பேசிக்கொண்டே
தூங்கிப் போன
காலத்தின் அழகியலது
ஒரு கூட்டுப்
பறவைகளாய்க்
கொஞ்சிய
வாழ்வது
நெஞ்சில் என்றும்
இன்பம்
நீங்காத
நினைவது
எதைச்சொல்ல
எதைவிடுக்க
20வரிகள் எப்படிப்
போதும்?
பாட்டி சொன்ன தேவலோகத்து
யானைக்க்கதையது
சித்திசொன்ன
பாம்புக்கதை பேய்க்கதை
அய்யோ
பயங்கரம்
சின்னவயசுல
நான் சொல்வேனாம்
சுல்லானும்
உள்ளானும்
கருப்புவண்ண
எழுதுகோல்
அலமேலு அம்மா
கொடுத்தது
பந்துமுனைப் பேனா
கணபதி
அண்ணா தந்தது
ஏடு முழுதும் நிரம்பிய
தோழிகளின்
உணர்வூட்டமது
மண்சாலை மாட்டுவண்டி புத்தகப்பை சுமந்த பயணமது
வெள்ளித்திரை
காண்பதில்
வியந்து
அகன்ற
விழிகளது
கவினுறு
காட்சியது
பழகிய
முகமெல்லாம்
பளிச்சென்று
வந்துசெல்லும்
இரவிது
(கவித்துளி கற்பனையின் ஊற்று கவிதையின் காற்று புதுக் கவிதைப் போட்டியில் பங்கேற்ற கவிதை. ஔவை அ.ர.தீபாரவி கோவையைச் சேர்ந்தவர். பி.காம்.டி.டி.எட், தமிழ் இசை இலக்கிய ஆர்வலர். தமிழ் பாடுவோம், தமிழ் அருவி, கவித்துளி நிறுவனர். ஈரவிழி இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளர். ஐந்தாண்டு காலமாக இணையத்தில் ஈடில்லாத் தமிழ் சேவை. கவிஞர்களை ஊக்கப்படுத்தும் பணிதனைச் செவ்வனே செய்து வருகிறார். கவிஞர்களின் உள்ளாார்ந்த திறனை வெளிக்கொண்டு வருவதே இவருடைய நோக்கம்).
Asiad 2026 Cricket: தங்க மகளிரைப் பின்பற்றி.. பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய ஆடவர்!
தவெக வேட்பாளர் குறித்து உருவக் கேலி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கண்டனம்!
தாராபுரம் தவெக வேட்பாளரை உருவகேலி செய்த விவகாரம் : மு.க.ஸ்டாலின் மீது புகார்
மதுராந்தகம் இடைத்தேர்தல்: செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்
ஜெம் கிரானைட் வீரமணி மீது மேலும் ஒரு பெண் புகார்: தீவிரமடையும் விசாரணை
Malliga Selvaraj Poem: கோலங்கள்!
கோவில்களில் காட்டப்படும் தீபாராதனைகளுக்கு விதம் விதமான அர்த்தம் இருக்கு தெரியுமா?
கிருஷ்ணர் ஏன் ராதையைக் காதலித்து ருக்மணியை மணந்தார் தெரியுமா?
Chennai Marina beach: 140 வருஷத்துக்கு முன்னாடி மெரீனா கடற்கரை எப்படி இருந்துச்சு தெரியுமா?
{{comments.comment}}