டெல்லி: இந்திய படையினரின் தாக்குதல் உள்ளிட்டவை குறித்து நேரலையில் ஒளிபரப்பு செய்வதையும், முக்கிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக பகிரங்கமாக செய்தி ஒளிபரப்புவதையும் ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்புத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய முப்படையினரின் செயல்பாடுகள் இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு கடுமையானதாக இருக்கிறது. இதனால் பாகிஸ்தான் தரப்பு திக்குமுக்காடிப் போயுள்ளது.
ஆனால் நமது நாட்டு ஊடகங்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால் மத்திய அரசு திக்குமுக்காடிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. காரணம், அந்த அளவுக்கு போட்டுத் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக ஆங்கில சானல்களும், தமிழ் சானல்களும் போடும் தலைப்புகளும், வைக்கும் தம்ப்நெயில்களையும் பார்த்தால் நமது ராணுவமே அதிர்ச்சியாகி விடும். அந்த அளவுக்கு தாறுமாறாக செய்திகளைக் கவர் செய்கிறார்கள்.

குறிப்பாக பல தமிழ் டிவி சானல்களில் போடப்படும் தலைப்புகளும், வைக்கப்படும் தம்ப்நெய்ல் வரிகளும் கொடூரமாக உள்ளது. வெறித்தனமாக உள்ளது. ஏன் இப்படி இட்டுக்கட்டி ஓவராக செய்தியை ஒளிபரப்பு செய்கிறார்கள் என்று பலரும் கேட்கும் அளவுக்கு நிலைமை போய்க் கொண்டுள்ளது. மேலும் பல செய்தி சானல்கள் தவறான செய்திகளையும், மிஸ் லீடிங் செய்திகளையும் ஒளிபரப்புவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
பல இந்தி, ஆங்கில சானல்கள் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களின் எல்லையோர கிராமங்களுக்குப் போய் போரை உங்களுக்கு நேரலையாக காட்டுகிறோம் என்றெல்லாம் கூறி செய்திகளை ஒளிபரப்பி மக்களிடம் பீதியையும் கிளப்பிக் கொண்டுள்ளனர். இந்திய ராணுவம் முழு அளவிலான போரில் இறங்கி விட்டது போலவே பல சானல்கள் மக்களிடையே செய்தி பரப்பிக் கொண்டுள்ளன. ஆனால் இந்தியா இதுவரை முழு அளவிலான போரில் இறங்கவில்லை. பாகிஸ்தான் தரப்பின் தாக்குதலுக்கு நமது ராணுவம் பதிலடி மட்டுமே கொடுத்து வருகிறது. இதை ராணுவமே தெளிவாக விளக்கியும் உள்ளது.
இந்த நிலையில் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிவுரையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
அனைத்து ஊடகங்கள், டிஜிட்டல் தளங்கள் மற்றும் தனிநபர்கள், இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளையும், பாதுகாப்புப் படையினரின் நகர்வுகளையும் நேரடி ஒளிபரப்பு செய்வது அல்லது நிகழ்நேர அறிக்கையிடுவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
முக்கியமான அல்லது ஆதார அடிப்படையிலான தகவல்களை வெளியிடுவது பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளின் செயல்திறனைப் பாதிப்பதோடு, உயிர்களுக்கும் ஆபத்தை விளைவிக்கலாம்.
கார்கில் போர், 26/11 தாக்குதல்கள் மற்றும் காந்தஹார் விமானக் கடத்தல் போன்ற கடந்த கால சம்பவங்கள் மூலம், நேரலையான ரிப்போர்ட் செய்வதால் ஏற்படும் அபாயங்களை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
கேபிள் தொலைக்காட்சி நெட்வொர்க் விதிகள் (திருத்தம்), 2021 இன் பிரிவு 6(1)(p) இன் படி, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் அவ்வப்போதைய செய்தியறிக்கைகள் மட்டுமே பிரசுரத்திற்கு அனுமதிக்கப்படுகின்றன.
எனவே அனைத்து ஊடகங்களும், சம்பந்தப்பட்டவர்களும் பொறுப்புடன் செய்திகளை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி
பிரமிக்க வைக்கும் பிரண்டை துவையல்.. வரலாறு கூறும் சமையல் (பகுதி 3)
வசந்த நவராத்திரி!
அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்
ஆங்கிலேயர்களின் கண்ணில் விரலை விட்டு ஆட்டிய.. நாயகன்.. சுபாஷ் சந்திர போஸ்!
உங்க வாழ்க்கையே ஆதாரமாகட்டும்.. Let Your Life Be the Proof
நாளை 7 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!
NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்
{{comments.comment}}