டெல்லி: டெல்லியில் உள்ள செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த கார் திடீரென வெடித்துச் சிதறியதில் அந்தப் பகுதியில் இருந்த பலர் உயிரிழந்துள்ளனர். இது தீவிரவாதத் தாக்குதலா அல்லது விபத்தா என்று விசாரணை நடந்து வருகிறது.
இரவு 7 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு வாகனங்கள், காவல்துறையினர், தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் உள்ளிட்டோர் அங்கு விரைந்து சென்றனர்.
கார் மூலம் ஏற்பட்ட தீயானது, இரவு 7.29 மணிக்குக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக துணைத் தீயணைப்பு அதிகாரி ஏ.கே. மாலிக் தெரிவித்தார்.

இந்த வெடிப்புச் சம்பவம் குறித்து அழைப்பு வந்ததும், ஏழு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து அனுப்பப்பட்டதாகவும், இந்த விபத்தில் பலர் உயிரிழந்தனர் மற்றும் 24 பேர் காயமடைந்தனர் என்றும் மாலிக் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
சம்பவம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கார் வெடிப்பில் காயமடைந்த 24 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 10 பேர் வரை உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள சிக்னல் பகுதியில் சென்றபோதுதான் அது வெடித்துள்ளது. இதனால் அருகில் இருந்த கார்களும் தீப்பிடித்துக் கொண்டன. இதில்தான் பலர் உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு
டெல்லி கார் வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. டெல்லியில் அனைத்துப் பகுதிகளிலும் போலீஸார் தீவிர சோதனையில் இறங்கியுள்ளனர்.
தமிழ்நாட்டிலும்
தமிழ்நாட்டிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள், வாகனத் தணிக்கை, விடுதிகள் உள்ளிட்டவற்றில் சோதனை போன்றவை முடுக்கி விடப்பட்டுள்ளன. ரயில் நிலையங்கள், விமான நிலையம் உள்ளிட்ட அனைத்துப் பொது இடங்களிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பிறந்தது புத்தாண்டு.. இந்தியா முழுவதும் கொண்டாட்டம்.. மக்கள் மகிழ்ச்சி வெள்ளம்
100 கோடி நன்கொடை! கான்பூர் ஐஐடி மாணவர்கள் செய்த நெகிழ்ச்சியான செயல்!
டிக் டிக் டிக்... கடிகாரம் மாட்டும் திசையை வைத்து வீட்டின் நன்மைகள் இருக்காம்... இதோ முழு விபரம்!
தானத்தில் சிறந்த தானம் எது தெரியுமா?
கரூர் சம்பவ வழக்கு...விரைவில் விஜய்க்கு சம்மன் அனுப்ப வாய்ப்பு
எங்கள் விவகாரத்தில் தலையிட நீங்கள் யார்?.. மதிமுக, விசிக, கம்யூ.களுக்கு காங். எம்.பி. கேள்வி
முக்கிய முடிவுகள்?.. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜன. 6ல் அமைச்சரவைக் கூட்டம்
திருவாதிரையில் ஒரு வாய் களி.. சரி அதை விடுங்க.. களி பிறந்த கதை தெரியுமா?
உலகில் புத்தாண்டு முதலில் பிறக்கும் நாடு... கடைசியாக புத்தாண்டு பிறக்கும் நாடு எது தெரியுமா?
{{comments.comment}}