தமிழகத்தின் புதிய டிஜிபி யார்.. டெல்லி யுபிஎஸ்சி இன்று ஆலேசானை!

Sep 26, 2025,02:54 PM IST

சென்னை: தமிழகத்தின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபி யார் என்பது குறித்து இன்று முடிவு செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.


தமிழக காவல்துறையின் டிஜிபியாக இருந்த சங்கர் ஜூவாலின் பதவிக்காலம் கடந்த ஆகஸ்ட் 3ம் தேதியுடன் முடிவடைந்தது. புதிய டிஜிபியைத் தேர்வு செய்து மூன்று மாதங்களுக்கு முன்பாக மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்திற்கு தமிழக அரசு அனுப்பியிருக்க வேண்டும். 


ஆனால், முறைப்படி அதனைக் கடைப்பிடிக்காமல், கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் தான் அதற்கான பட்டியல் அனுப்பப்பட்டது. அதே சமயம், சங்கர் ஜூவால் ஓய்வு பெற்றதால், பொறுப்பு டிஜிபியாக ஐபிஎஸ் அதிகாரியான வெங்கட்ராமனை  முதல்வர் ஸ்டாலின் நியமித்தார். இந்த நியமனம் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முரணாக இருப்பதாக சர்ச்சைகள் கிளம்பின.




இந்தநிலையில், தமிழ்நாடு டிஜிபி நியமனம் குறித்து டெல்லியில் யுபிஎஸ்சி இன்று ஆலோசனை செய்து வருவதாகவும், இந்த ஆலோசனையின் போது தமிழக அரசு சார்பில் தலைமை செயலாளர் என்.முருகானந்தன், உள்துறைச் செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் பங்கேற்று இருப்பதாகவும் தெரிகிறது.


தமிழ்நாட்டின் புதிய டிஜிபி பதவிக்கு தகுதியான 3 பேரை யுபிஎஸ்சி இன்று இறுதி செய்ய வாய்ப்பு உள்ளதாகவும், இறுதி செய்யப்படும் 3 பேரில் ஒருவரை தமிழ்நாடு டிஜிபியாக தமிழ்நாடு அரசு நியமிக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நாளை கரூர், நாமக்கல்லில் விஜய் பிரச்சாரம்: தொண்டர்களுக்கு தவெக தலைமை அறிவுரை!

news

இந்த விருது என்னுடையது மட்டுமல்ல, நம்முடையது: கலைமாமணி விருது குறித்து அனிருத் நெகிழ்ச்சி பதிவு

news

தமிழகத்தின் புதிய டிஜிபி யார்.. டெல்லி யுபிஎஸ்சி இன்று ஆலேசானை!

news

தவெக கொடி விவகாரம்: விஜய் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

அதிமுக, திமுக கொள்கைகளை எடுத்து கொண்டு வந்துள்ளார் விஜய்: சீமான் காட்டம்!

news

சாதிவாரி கணக்கெடுப்பு சட்ட விரோதம் அல்ல..புரிய வேண்டியவர்களுக்கு இனியாவது புரியுமா? அன்புமணி ராமதாஸ்

news

நவராத்திரி சிறப்புகள்.. முப்பெரும் தேவியர் வழிபாடும், அதன் முக்கியத்துவமும்!

news

தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றைக்கு சவரனுக்கு ரூ.320 உயர்வு

news

விஜய் பிரச்சாரம்.. கரூரில் கிடைத்தது பச்சைக் கொடி.. நாளை என்ன பேசுவார்?

அதிகம் பார்க்கும் செய்திகள்