மும்மொழிக் கொள்கை என்ற.. பேச்சுக்கே இடமில்லை.. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம்!

Feb 17, 2025,06:30 PM IST

சென்னை:  தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் மும்மொழிக் கொள்கை என்ற பேச்சுக்கே இடம் இல்லை. இரு மொழி கொள்கை மட்டுமே பின்பற்றப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


மும்மொழி  கொள்கையை ஏற்றால் மட்டுமே  தமிழ்நாட்டிற்கு நிதி வழங்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. 


குறிப்பாக முதல்வர் மு க ஸ்டாலின் மும்மொழி கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது என்று மிரட்டுவதை தமிழர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்  எச்சரிக்கை விடுத்திருந்தார். அதே போல் அதிமுக, காங்கிரஸ், நாதக, தவெக, உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் அமைச்சரின் பேச்சுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். 




மும்மொழிக் கொள்கையை எதிர்த்தும், மத்திய அரசை கண்டித்தும் நாளை மாலை 4 மணிக்கு திமுக சார்பில் அனைத்து கூட்டணி கட்சிகளும் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், 


மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது அநியாயம். இதெல்லாம் அராஜகம். ஒன்றிய அரசு மாநில அரசின் மீது நிகழ்த்துகின்ற பெரும் கொடுமை. நாம் கட்டியிருக்க கூடிய வரிப்பணத்தில் தான் கேட்கிறோம். மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள். நமது மாநிலத்திற்கு ஒதுக்கவேண்டிய நிதியை சேர்த்தும் மற்ற மாநிலத்திற்கு கொடுத்திருக்கிறார்கள். எப்போதுமே தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது. இரு மொழிக் கொள்கை மட்டுமே பின்பற்றப்படும். 


தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தெளிவாக கூறி விட்டார்கள். நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் துறை அதிகாரிகளும் என்னிடம் விளக்கியுள்ளனர் ‌. முதல்வரிடம் கலந்து ஆலோசித்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.


மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எந்த நிதியும் ஒதுக்கவில்லை. குறிப்பாக ஃபெஞ்சல் புயலுக்கு 6500 கோடி நிதி கேட்கப்பட்ட நிலையில் வெறும் 600 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்திருந்தது. தொடர்ந்து மத்திய அரசு தமிழ்நாடை  புறக்கணித்து வருகிறது. இதையெல்லாம் தமிழக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கண்டிப்பாக நிச்சயம் பதிலடி கொடுப்பார்கள். அதே சமயத்தில் எந்த சூழ்நிலையிலும் கல்வி உரிமையை நமது தமிழ்நாடு அரசும் முதல்வரும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள் கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

2024ம் ஆண்டில் கொலை குற்றம் 6.8% குறைந்துள்ளது.. சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்!

news

சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றிய இந்திய அணிக்கு.. பரிசுத்தொகையை அள்ளிக் கொடுத்த.. பிசிசிஐ!

news

தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு.. மழை பிளஸ் வெயில் இதுதான் நிலவரம்..!

news

டாஸ்மாக் விவகாரத்தில்.. அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க தடை.‌. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு!

news

கொலை பட்டியல் தான் திமுகவின் சாதனை.. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கு!

news

15 சிலிண்டருக்கு மேல் பயன்படுத்த கட்டுப்பாடு விதித்த.. இந்திய எண்ணெய் நிறுவனம்..!

news

Govt jobs vacancy: போக்குவரத்து துறையில்.. 3,274 காலிப் பணியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

news

நாதக... இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளராக... வீரப்பன் மகள் வித்யாராணி நியமனம்

news

மார்ச் 22.. மக்கள் நீதி மய்யம் .. கமல்ஹாசன் தலைமையில் செயற்குழு, நிர்வாகக் குழு கூட்டம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்