சென்னை: 2026 சட்டசபைத் தேர்தலில் திமுகவின் எதிரி யார் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சற்றும் யோசிக்காமல் சொன்ன பதிலால் பரபரப்பு கூடியது.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று சென்னை மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு ஆய்வுப் பணிகளில் காலையில் ஈடுபட்டார். அதன் பின்னர் சென்னை ஐஐடியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் உதயநிதி ஸ்டாலின்.
செய்தியாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்த உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர் ஒருவர், வருகிற 2026ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் திமுகவின் எதிரி யார் என்று கேட்டார். அதற்கு சற்றும் யோசிக்காத உதயநிதி ஸ்டாலின், தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடம் இருக்குங்க என்று சட்டென்று கூறி விட்டு கிளம்பினார்.

வரும் சட்டசபைத் தேர்தல் களத்தில் திமுகவுக்கு தவெக கடும் நெருக்கடியைக் கொடுக்கும் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. தவெக தலைமையில் கூட்டணி அமையவிருப்பதாகவும், அதில் யாரெல்லாம் இடம் பெறக் கூடும் என்ற பரபரப்பான பேச்சும் அடிபடுகிறது. மேலும் விஜய்யும் கூட, திமுகவை தனது கொள்கை எதிரி என்று அறிவித்து சூட்டைக் கிளப்பி விட்டுள்ளார். இதுதொடர்பான விவாதங்கள் இன்னும் கூட முடியவில்லை.
விஜய்யின் வருகை, அவரது கட்சிக்கு கூடி வரும் இளைஞர் பட்டாளத்தின் ஆதரவு ஆகியவற்றை திமுகவும் கவனிக்காமல் இல்லை. அதற்கேற்ப அது தனது பணிகளையும் முடுக்கி விட்டு வருகிறது. விஜய்யின் வருகையை ஊகித்துதான் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக்கப்பட்டுள்ளார். உதயநிதி ஸ்டாலினும் விடாமல் தொடர்ந்து சுறுசுறுப்பாக பணியாற்றி வருகிறார். கிடைக்கும் கேப்பில் எல்லாம் எதிராளிகளுக்கு அதிரடியாக பதில் கொடுத்து வருகிறார். இந்த நிலையில்தான் திமுகவின் எதிரி யார் என்ற கேளவிக்கு இப்படி ஒரு பதிலை அளித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
The world of AI.. மனித சிந்தனையின் நவீன வடிவம்.. செயற்கை நுண்ணறிவு
ஆனந்தம் அடைகிறது மனம்.... அனுபவத்தில்!
ஓ.. கணிதமே... நீ இல்லையேல் ஒன்றுமே இல்லை.. தேசிய கணித தினம்
மார்கழி மாதம் மட்டுமே காட்சி தரும்.. மரகதலிங்க தரிசனம்.. திருச்செங்கோடு!
நாரணஹரியை நாளும் பணிந்து .. நற்பாதம் உய்வோமே!
அவள் தான் எங்கள் ஆனந்தஜோதி...!
ஏகநாஞ்சேரி என்றொரு கிராமம்!
Christmas: தவெகவின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.. மாமல்லபுரத்தில் இன்று விஜய் பேச்சு!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 22, 2025... இன்று நினைத்தது நிறைவேறும்
{{comments.comment}}