தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் பள்ளி மாணவர்கள் இணைந்து நடத்திய தேர்தல் விழிப்புணர்வு நாடகம் அனைவரையும் கவர்ந்தது. 100 சதவீத வாக்களிப்பை உறுதி செய்வதற்காக நடத்தப்பட்ட நாடகம்தான் இது.
நாடு முழுவதும் தேர்தல் திருவிழா களை கட்டியுள்ளது. முதல் நாள் திருவிழா, ஏப்ரல் 19ம் தேதி அதாவது நாளை மறு நாள் நடைபெறவுள்ளது. அன்றுதான் முதல் கட்டத் தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டுக்கு அன்றுதான் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
தேர்தலில் 100 சதவீத வாக்களிப்பை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் மூலம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி மக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் தேர்தல் ஆணையம் முன்னெடுத்து வருகிறது.
அந்த வகையில், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியர் இணைந்து தேர்தல் விழிப்புணர்வு நாடகம் போட்டு அசத்தியுள்ளனர். தேவகோட்டை நடராஜபுரம் காளியம்மன் கோவில் தெருவில் 100 சதவிகித வாக்கு பதிவை வலியுறுத்தி தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்வில் ஈடுபட்டனர்.
மாணவி கனிஸ்கா ,லெட்சுமி,நந்தனா ,ஜெயஸ்ரீ ஆகியோர் ஓட்டுக்கு பணம் கொடுத்த தூக்கிப் போடுங்க என்கிற விழிப்புணர்வு பாடலை பாடி பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தினார். "பணத்திற்காக நீயும்தானே ஓட்டளிக்காதே, நீயும் வித்துப்புட்டு பிறகுதானே தெருவில் நிற்காதே" என்று வரும் பாடல் வரிகளுடன் விலையில்லா ஓட்டுரிமையை நீங்கள் விற்காதீர் என்கிற தேர்தல் விழிப்புணர்வு பாடலை மாணவர்கள் தீபா, கார்த்திக் ஆகியோர் ராகத்துடன் பாடினார்கள்.
நாடகம் வாயிலாக , நாங்கள் ஓட்டை நோட்டுக்கு போடமாட்டோம் , நாட்டு நன்மைக்குத்தான் போடுவோம் என்பதை வெளிப்படுத்தி ,உங்கள் விரலின் மை எல்லாக்கரையையும் போக்கட்டும் என்றும்,வாக்கை விற்பனை செய்தவரின் நிலையை விளக்கும் வகையில் நாடகங்களை மாணவர்கள் யோகப்பிரியா, கனிஸ்கா, முகல்யா, கார்த்திக், ரித்திகா, சாதனாஸ்ரீ, தனலெட்சுமி , கவிஷா ஆகியோர் நடித்து காண்பித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
வாக்குரிமை என்பது நமது வாழ்க்கையின் அடிப்படை உரிமை என்பதை நாம் மறந்து விடாமல் இருக்க அழகான கவிதையை கூறி அசத்தினார்கள் மாணவி ஏஞ்சல் ஜாய் , ரித்திகா,. பாடல் மூலம் தேர்தல் விழிப்புணர்வை மாணவர்கள் சபரீஸ்வரன்,சபரி வர்ஷன்,சுஜன்,விஜய்கண்ணன் ஆகியோர் விளக்கினார்.
ஆசிரியை முத்துமீனாள் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். தேவகோட்டை வட்டாட்சியர் அசோக்குமார் தலைமை தாங்கி தேர்தல் விழிப்புணர்வு தொடர்பாக பேசினார். ஆசிரியர்கள் முத்துமீனாள், ஸ்ரீதர் ஆகியோர் மாணவர்களின் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து இருந்தனர். வருவாய் ஆய்வாளர் மாலதி , கிராம நிர்வாக அலுவலர் அருணாச்சலம் உட்பட பலர் பங்கேற்றனர். நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார். நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் பங்கு கொண்டு பார்த்து ரசித்தனர்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}