"மம்மி.. கொஞ்சம் கேக்கை எடுத்து பிராவோ மூஞ்சில அப்புங்க".. தோனி பலே "வாழ்த்து"!

Apr 05, 2023,12:48 PM IST
மும்பை: மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் வீரரும்,  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ராக் ஸ்டாருமான வேயன் பிராவோவின் தாயாரின் பிறந்த நாளையொட்டி கேப்டன் தோனி போட்டுள்ள வீடியோ பலரையும் கலகலக்க வைத்துள்ளது.

2023 ஐபிஎல் சீசனை வித்தியாசமாக ஆரம்பித்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். முதல் போட்டியில் குஜராத் அணியுடன் தோல்வியைத் தழுவினாலும் கூட, 2வது போட்டியில் லக்னோ அணியை சூப்பராக தோற்றகடித்து ரசிகர்கள் நெஞ்சில் பார் வார்த்துள்ளது தோனி அணி.



இந்த நிலையில் பிராவோவின் தாயாருக்கு 65வது பிறந்த நாள் வந்ததையொட்டி கேப்டன் தோனி வித்தியாசமான ஒரு வாழ்த்தைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ஒரு வீடியோ போட்டுள்ளார். அதில், 

"ஹாய் மம்மி பிராவோ. உங்களுக்கு என்னுடைய 65வது பிறந்த நாள் வாழ்த்துகள். ஒரு கேக்கை எடுத்து என் சார்பில் பிராவோ மூஞ்சியில் அப்புங்கள்.. ஆல் தி வெரி பெஸ்ட்" என்று கூறி கலகலக்க வைத்துள்ளார் அந்த வீடியோவில்.

இந்த வீடியோவை பிராவோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டுள்ளார். அதில், தனது பிறந்த நாளன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதிய போட்டியில் அது வெல்ல வேண்டும் என்று எனது தாயார் விரும்பினார். அதன்படியே அருமையான வெற்றியை எனது அணி எனது தாயாருக்குக் கொடுத்துள்ளது.  எனது அணிக்கும், வீரர்களுக்கும் எனது வாழ்த்துகள்.  இப்போது எனது சாம்பியன் தாயாரின் 65வது பிறந்த நாளையொட்டி அவரை வாழ்த்துங்கள்.  மொத்த சென்னை ஐபிஎல் சார்பிலும், தோனி, சுரேஷ் ரெய்னா, அணி வீரர்கள் மற்றும் என் சார்பில் அவருக்கு எனது வாழ்த்துகள் என்று கூறியுள்ளார் பிராவோ.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் போராடித் தோற்கடித்தது. சென்னை அணியின் பேட்டிங் அருமையாக இருந்தது. ருத்துராஜ் கெய்க்வாட் 57 ரன்களையும், டேவன் கான்வே 47 ரன்களையும் குவித்தனர்.  20 ஓவர்களில் 7 வி்கெட் இவப்புக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 217 ரன்களைக் குவித்தது. பின்னர் ஆடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்து தோல்வியுற்றது.

சமீபத்திய செய்திகள்

news

பாகிஸ்தானுக்கு எதிரான அனைத்து விதமான தாக்குதல்களும் நிறுத்தப்பட்டன - இந்தியா அறிவிப்பு

news

தாக்குதலை உடனடியாக நிறுத்த இந்தியா, பாகிஸ்தான் ஒப்புதல் - அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்

news

இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரமாண்ட பேரணி.. ஆளுநர் பாராட்டு!

news

எனது வருவாயை தேசிய பாதுகாப்பிற்காக அளிக்கிறேன்...இளையராஜா அறிவிப்பு

news

அமேசானில் ரூபாய் 3 லட்சத்துக்கு பில்.. எதற்கு தெரியுமா?.. இந்த பயலை வச்சுக்கிட்டு!!

news

முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனைக் கூட்டம்

news

பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில்.. காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு.. பீதியில் உறைந்த மக்கள்‌‌..!

news

ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் இவரா?...செம சம்பவம் காத்திருக்கு போலவே

news

இந்திய-பாகிஸ்தான் எல்லையில் படப்பிடிப்பு நடத்த வேண்டாம்...aicwa அறிவுறுத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்