சென்னை: ஜெயம் ரவி நடிப்பில் வெளியான சைரன் படத்தின் இயக்குனர் அந்தோணி பாக்கியராஜின் திருமணம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இனிதே நடந்து முடிந்தது. இதில் பல்வேறு திரை பிரபலங்கள் கலந்து கொண்டு மணமகளை வாழ்த்தினர். இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் இரும்புத்திரை மற்றும் விசுவாசம் படங்களில் மூலம் ரைட்டராக அறிமுகமானவர் அந்தோணி பாக்கியராஜ். இவர் பல படங்களில் பணிபுரிந்து உள்ளார். இதனைத் தொடர்ந்து அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில், ஜெயம் ரவி நடித்த சைரன் படம் சமீபத்தில் வெளியானது. ஆனால் இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் கூட இப்படத்தின் வித்தியாசமான கதைக்களம் ரசிகர்களிடையே கவனம் பெற்றது. மேலும் வசூல் ரீதியாகவும் சைரன் படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இயக்குனர் அந்தோணி பாக்கியராஜ் தனது காதலி ரம்யாவை இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை கரம் பிடித்தார் . இவர்களுடைய திருமணமும் தேவாலயத்தில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அன்று மாலை சென்னை கோவிலம்பாக்கத்தில் உள்ள பி ஆர் பேலஸில் அந்தோணி பாக்யராஜின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் நடிகர்கள் ஜெயம் ரவி- ஆர்த்தி ரவி, சமுத்திரக்கனி, தயாரிப்பாளர்கள் மோகன், சுஜாதா, விஜயகுமார், தனஞ்செயன், இயக்குனர்கள் சிவா, ஆர் ரவிக்குமார், அருண் ராஜா காமராஜ், சாம் ஆன்டன், பிஎஸ் மித்திரன், பி விருமாண்டி, எம் ஆர் மாதவன், கிஷோர் ராஜ்குமார், ஆர். சபரிமுத்து, சண்முகம் முத்துசாமி, டிஓபி சரவணன், பாடலாசிரியர்கள் சினேகன் -கனிகா சிநேகன், முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : நான்கு முனை போட்டி உறுதியானது
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் தள்ளிவைப்பு: அமைச்சர் அருண்ராஜ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இதுதான் சூப்பர் Couple Goal.. மனைவி மாநகராட்சி ஆணையர்.. கணவர் எஸ்.பி.. வேலூரில்!
சர்வதேச சுடோகு தினம் .. மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர் விளையாட்டு!
"லட்க்கி கொய்லா கொஞ்சம் கொடுப்பா".. நாக்பூரை பதற வைத்த மெட்ராஸ்!
சிந்தனைச் சிதறல்.. வடிப்பது சிற்பம் தான் என்றாலும்.. சிறுகச் சிறுக சிதைக்கும் உளிகள்!
சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை!
காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: நகராட்சி சார்பில் மாணவர்களுக்கு தட்டு, டம்ளர் வழங்கல்
{{comments.comment}}