சென்னை: தேமுதிக தனது கூட்டணியை முடிவு செய்து விட்டதாக தெரிகிறது. 3ம் தேதி கூட்டணியை அறிவிக்கவுள்ளதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். இதன் மூலம் எந்தக் கூட்டணி என்ற முடிவுக்கு ஒரு வழியாக தேமுதிக வந்து விட்டதாக சொல்லப்படுகிறது.
ஒரே நேரத்தில் திமுக மற்றும் அதிமுகவுடன் கூட்டணி தொடர்பாக தேமுதிக பேசி வந்தாக தகவல்கள் வெளியாகி வந்தன. இதனால் யாருடன் தேமுதிக இணையும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அதிமுக தரப்பு படு வேகமாக கூட்டணியை பலப்படுத்தி வந்த நிலையில் தேமுதிகவும் இணையுமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

ஆனால் எத்தனை சீட் என்பதில் தேமுதிக மற்றும் திமுக, அதிமுக கட்சிகளுக்கு இடையே இழுபறி நீடித்த காரணத்தால்தான் தேமுதிக கூட்டணி அமைப்பதில் குழப்பமும், தாமதமும் நிலவி வந்ததாக பேசப்பட்டது. இந்த நிலையில் தற்போது தேமுதிக தனது கூட்டணியை முடிவு செய்து விட்டதாக சொல்லப்படுகிறது.
இதுகுறித்து கட்சி பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில், கூட்டணி குறித்து பிப்ரவரி 3ம் தேதி அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.. எனவே அன்றைய தினம் தேமுதிக எந்தக் கூட்டணிக்குப் போகப் போகிறது என்பது தெரிந்து விடும்.
அதிமுகவாக இருந்தால் மீண்டும் அதிமுக கூட்டணியில் தேமுதிக இணையும். அதுவே திமுகவாக இருந்தால், தேமுதிகவின் வரலாற்றிலேயே முதல் முறையாக திமுக வுடன் கூட்டணி வைப்பதாக அமையும். விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தபோது அவர் கடுமையாக சாடிய கட்சி திமுகதான். அப்போது மக்களுடன் மட்டுமே கூட்டணி என்று தொடர்ந்து கூறி வந்தார் விஜயகாந்த். பின்னர் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தார். அதன் பிறகு தேமுதிக தொடர்ந்து கூட்டணி அரசியலிலேயே பயணித்து வருகிறது.
கடந்த சில தேர்தல்களில் தேமுதிக குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெறத் தவறினாலும், அக்கட்சிக்கு என ஒரு நிலையான வாக்கு வங்கி இன்னும் இருப்பதை மறுக்க முடியாது. தற்போது திமுக தலைமையிலான கூட்டணி வலுவாக உள்ள நிலையில், தேமுதிகவைத் தன் பக்கம் இழுப்பதன் மூலம் தனது பலத்தை மேலும் அதிகரிக்க திமுக விரும்பக்கூடும்.
ஒரு வலுவான கூட்டணியில் இருந்தால் மட்டுமே மீண்டும் சட்டமன்றத்திலோ அல்லது நாடாளுமன்றத்திலோ கணிசமான இடங்களைப் பிடிக்க முடியும் என்பது தேமுதிகவின் தற்போதைய யதார்த்தம். விஜயகாந்த் மறைவின் போதும், அதற்குப் பின்பும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தேமுதிக மீது, காட்டிய தனிப்பட்ட அக்கறை மற்றும் மரியாதை, இரு கட்சிகளுக்கும் இடையே இருந்த கசப்புணர்வை ஓரளவுக்குக் குறைத்துள்ளதாகக் கருதப்படுகிறது.
இருப்பினும், இந்தக் கூட்டணி அமைவதில் சில நடைமுறைச் சிக்கல்களும் உள்ளன. திமுக கூட்டணியில் ஏற்கனவே காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக எனப் பல கட்சிகள் உள்ளன. தேமுதிக எதிர்பார்க்கும் எண்ணிக்கையிலான தொகுதிகளை ஒதுக்குவது திமுகவிற்குப் பெரும் சவாலாக இருக்கும்.
கடந்த காலங்களில் தேமுதிகவும் திமுகவும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளன. தொண்டர்கள் மட்டத்தில் இந்த மாற்றத்தை எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்பதும் முக்கியமானது. இதை எதிர்க்கட்சிகளே பெரிதாக எடுத்து வைக்கவும் வாய்ப்புள்ளது. இதையும் இரு கட்சிகளும் சமாளிக்க வேண்டும்.
தேமுதிக திமுகவுடன் இணைந்தால், அது வட தமிழகம் மற்றும் சில குறிப்பிட்ட பகுதிகளில் திமுகவின் வெற்றியை மேலும் உறுதிப்படுத்தும். ஆனால், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை, இது ஒரு பரபரப்பான விவாதமாகவே நீடிக்கும். பிப்ரவரி 3ம் தேதி வரை காத்திருப்போம்.
ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை...இன்று முக்கிய முடிவை அறிவிக்க வாய்ப்பு
கொலம்பியா எல்லையில் விபத்துக்குள்ளான விமானம்.. எம்.பி உள்பட 15 பேர் பலி
பிப்ரவரி 3ம் தேதி கூட்டணியை அறிவிக்கும் தேமுதிக.. யாருடன் இணைகிறது?
ஒரே நாளில் சவரனுக்கு ரூ.9,520 உயர்ந்த தங்கம் விலை... அதிர்ச்சியில் உறைந்த வாடிக்காயாளர்கள்!
ஆட்சிக்கு வந்த 1728 நாட்களில் 4000 திருக்கோயில் குடமுழுக்குகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு!
தனியா.. கெத்தா.. மாமல்லபுரத்தில் சொன்னது போல நடக்கப் போகிறாரா விஜய்?
ராகுல் காந்தி - கனிமொழி திடீர் சந்திப்பு ஏன்? பின்னணி நடக்கும் பரபரப்பு அரசியல்
எந்த பக்கம் செல்வது?...முடிவு எடுக்க முடியாமல் தவிக்கும் மூவர்...யாருக்கு என்ன பிரச்சனை?
விஜய் உடன் சேர்ந்தால் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரலாம்...ஆரூடம் சொல்லும் எஸ்ஏசி
{{comments.comment}}