தமிழக அரசியலில் அதிரடி: விஜய் முன்னிலையில் தவெகவில் இணையும் திமுக, அதிமுக நிர்வாகிகள்!

Jan 05, 2026,01:08 PM IST

சென்னை: விஜய் முன்னிலையில் இன்று பல்வேறு மாவட்ட திமுக, அதிமுக நிர்வாகிகள் தவெகவில் இணைகின்றனர்.


தமிழக சட்டப்பேரவை தேர்தலை இலக்காகக் கொண்டு தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகளில் வேகம் காட்டி வருகிறார். இதன் ஒரு பகுதியாக, இன்று சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் முக்கிய நிகழ்வில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த திமுக மற்றும் அதிமுக நிர்வாகிகள் தங்களை தவெகவில் இணைத்துக் கொள்ள உள்ளனர்.





திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த திமுக, அதிமுகவின் முக்கிய மாவட்ட மற்றும் ஒன்றிய அளவிலான நிர்வாகிகள் பலர் விஜய்யை சந்தித்து கட்சியில் இணைய உள்ளனர். அதன்படி, தஞ்சாவூர் மத்திய மாவட்டம் திமுக வர்த்தகர் அணி அமைப்பாளர் சி.சுந்தரபாண்டியன். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் கண்ணாயிரம். திருவள்ளூர் அதிமுக முன்னாள் நகர்மன்ற தலைவர் கமாண்டோ பாஸ்கரன். புதுச்சேரி முன்னாள் ADMK MLA பெரியசாமி. சென்னை மாநகராட்சி 23 ஆவது வார்டு கவுன்சிலர் ராஜன் பர்னபாஸ். நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி சமீபத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்த ஜெகதீச பாண்டியன் உள்ளிட்டோர் தவெகவில் இணைகின்றனர்.


தவெக கட்சியில் மற்ற கட்சியினை சேர்ந்தவர்கள் தாமாக முன்வந்து இணைவது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. ஏற்கனவே உறுப்பினர் சேர்க்கையில் சாதனை படைத்து வரும் தவெக, இப்போது மற்ற கட்சிகளின் "வட்டார பலத்தை" (Local Base) உடைக்கத் தொடங்கியுள்ளது. இது வரும் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திருப்பரங்குன்றம் விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய முடிவு

news

கூட்டணிக்கு யாரும் வரல...தேர்தல் திட்டம் இதுவா...என்ன செய்ய போகிறார் விஜய்?

news

இன்று மாலை வீட்டில் விளக்கேற்றுங்க...நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்

news

ஜனநாயகன் படத்தை 10ம் தேதி ஏன் தள்ளி வைக்கக் கூடாது.. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி

news

காணாமல் போன வைர மாலை (ஒரு பக்க சிறுகதை)

news

தமிழகத்தில் வச்சு செய்யப்போகும் கனமழை... எப்போ, எங்கெல்லாம் என்று தெரியுமா?

news

திமுக இனியாவது நீதிமன்ற தீர்ப்பினை மதிக்க வேண்டும்: அண்ணாலை

news

பொம்மையம்மா.. பொம்மை!

news

நான் அப்படியே ஸ்வீட் ஷாக் ஆயிட்டேன்.. I got stunned!

அதிகம் பார்க்கும் செய்திகள்