சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனை கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி, கே.என். நேரு, பொன்முடி எ.வ.வேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர். தேர்தல் பணிகள் குறித்து நிர்வாகிகள் உடன் ஆலோசனை நடத்தினார்.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் 5 பேர் கொண்ட திமுக ஒருங்கிணைப்பு குழுவை திமுக தலைவரும் தமிழக முதல்வரும் ஆன மு க ஸ்டாலின் நேற்று முன்தினம் அறிவித்தார். இந்த குழுவில் திமுக முதன்மை செயலாளர் அமைச்சர் கே. என். நேருவும், அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதியும், அமைச்சர்கள் எ வ வேலு, தங்கம் தென்னரசு, இளைஞர் அணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
இந்த குழுவில் உள்ளவர்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அத்துடன் நேற்று மாலை ஒருங்கிணைப்பு குழுவின் முதல் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை எப்படி எதிர்கொள்வது எனபது குறித்தும், கட்சியினர் மேற்கோள்ள வேண்டிய அடுத்த கட்ட மாற்றங்கள் என்னன்ன என்றும், அமைப்பு ரீதியாக கட்சியை பலப்படுத்த மாவட்டங்களில் எண்ணிக்கையை அதிகரிக்க என்ன செய்வது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
சமூக வலைத்தளங்களில் கட்சிமுக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில் கட்சியின் தகவல் தொடர்பு பிரிவை வலுப்படுத்த என்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறன.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}