சென்னை: தமிழக முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இந்த கைது நடவடிக்கை தவெக அரசின் பழிவாங்கும் அரசியல் என்றும், இதனை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்றும் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
ஆணவம் அழிவுக்கான வழி :
முதல்வர் விஜய்க்கு எதிராக ஒருமையில் பேசியது, அவதூறு கருத்துக்களை தெரிவித்தது உள்ளிட்ட காரணங்களுக்காக திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அனிதா ராதாகிருஷ்ணன் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த சென்னை ஐகோர்ட், தனது கடும் கண்டனங்களை தெரிவித்ததுடன் மனுவை தள்ளுபடி செய்தது. முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே ஆத்தூரில் ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்த அனிதா ராதாகிருஷ்ணனை சேலம் ஆத்தூர் போலீசார் கைது செய்து, விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
அனிதா ராதாகிருஷ்ணனின் இந்த கைதுக்கு கண்டனம் தெரிவித்து திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், முதலமைச்சரை அவதூறாகப் பேசினார் என்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களைக் கைது செய்துள்ளது ‘Take Diversion’ அரசு.தொகுதியில் ஆய்வு மேற்கொண்டு மக்கள் பணியில் ஈடுபட்டு இருந்தவரை, அவசர அவசரமாகக் கைதுசெய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது?

சினிமா ஆக்ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர்! கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்மணி திருவைகுண்டம் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் மேல் கூறியுள்ள புகாரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத ‘தூயசக்தி ஆட்சி’, அந்த வழக்கில் ஏன் இந்த அவசரத்தைக் காட்டவில்லை?
தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் கொலை, கொள்ளைகளையும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களையும் தடுக்க வக்கில்லாமல் அடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை இணைத்துக் கொண்டிருக்கும் இந்த அரசின் மாற்றம் இதுதானா? அவதூறு வழக்கில் கைது செய்வதாக இருந்தால், இன்றைய அமைச்சர்கள் பேசும் பேச்சுக்கு எல்லாம் எத்தனை பேரைக் கைது செய்வது? வாக்களித்த மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல், குதிரைபேரத்தின் மூலமாகத் தனது நாற்காலியைத் தக்க வைத்து - விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளைக் கைது செய்து காலம் கடத்திவிடலாம் என நினைக்கிறார் முதலமைச்சர். ஆணவம் அழிவிற்கு வழி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
"சர்வாதிகாரத்தின் உச்சம்" – திமுக விளாசல்
அனிதா ராதாகிருஷ்ணன் திடீரென கைது செய்யப்பட்டுள்ளது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தற்போதைய அரசின் செயல்பாடுகளை மிகக் கடுமையாக விமர்சித்தார். தவெக அரசின் இந்த நடவடிக்கை முற்றிலும் ஜனநாயகத்திற்கு எதிரானது எனக் குறிப்பிட்ட அவர், "இந்த கைது நடவடிக்கை என்பது சர்வாதிகாரத்தின் உச்சம்" என்று சாடினார். மேலும், "கடந்த கால திமுக ஆட்சியில், வெறும் அவதூறு வழக்குகளுக்காக யாரையும் இப்படி நள்ளிரவிலோ அல்லது அவசர அவசரமாகவோ கைது செய்த வரலாறு கிடையாது. கருத்து சுதந்திரத்திற்கு திமுக எப்போதும் மதிப்பளித்தே வந்துள்ளது. ஆனால், தற்போதைய தவெக அரசு, திமுகவை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது."என்று அவர் குற்றம் சாட்டினார்.
சட்டரீதியாகச் சந்திப்போம்
அரசின் இத்தகைய அராஜகப் போக்கைக் கண்டு திமுக என்றும் அஞ்சாது என்று தெரிவித்த பாரதி, இத்தகைய அராஜகங்களுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றார். மேலும், இந்த அநீதியான கைது நடவடிக்கையை திமுக சட்ட வல்லுநர்கள் மூலம் நீதிமன்றத்தில் எதிர்கொண்டு, அனிதா ராதாகிருஷ்ணனை மீட்டெடுப்போம் என்றும் அவர் உறுதியளித்தார். தவெக அரசு பொறுப்பேற்ற சில காலங்களிலேயே எதிர்க்கட்சியினரை முடக்கும் நோக்கில் செயல்படுவதாக திமுக தொண்டர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் மத்தியில் இந்த கைது நடவடிக்கை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்து தர்மத்தில் ஆண் பெண் வேறுபாடே இல்லை.. காரைக்கால் அம்மையார் கதை!
CREATE YOURSELF
தாயுமானவன்.. ஒரு நிமிடக் கதை (27)
கழுதை கெட்டா குட்டிச் சுவரு.. அறிவோம் பழமொழியின் உண்மை அர்த்தத்தை!
அன்பின் மொழி
இறுதி அஞ்சலி!
NEVER and EVER
Poetic raindrops trickling from Viji Venkatesh’s ink!
தென்தமிழ் தலையங்கம்: Celluloid World to St Geroge Fort..கோட்டையைப் பிடிக்கத் துடிக்கும் கோடம்பாக்கம்
{{comments.comment}}