சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் நெஞ்சைப் பதற வைப்பதாக உள்ளது. சம்பந்தப்பட்ட குற்றவாளி குறித்து வரும் தகவல்களும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. அவருக்கு கடுமையான தண்டனை தர வேண்டும் என்று திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி கருணாநிதி தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் சீனியர் மாணவரோடு இரவு நேரத்தில் பேசிக் கொண்டிருந்த மாணவியை ஞானசேகரன் என்ற நபர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய சம்பவம் அனைவரையும் அதிர வைத்துள்ளது. அந்த நபரை சில மணி நேரங்களில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அந்த நபர் குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பலமுறை இதுபோன்ற பாலியல் அத்துமீறல்களில் அவர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிரியாணி விற்பனை செய்து வரும் ஞானசேகரன், தினசரி ரூ. 20,000 அளவுக்கு வருமானம் ஈட்டக் கூடியவராகவும் இருந்துள்ளார். அவர் மீது பலமுறை வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டவரும் கூட. ஹிஸ்டரி ஷீட்டராகவும் வலம் வந்துள்ளார்.
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக கனிமொழி தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள நிகழ்வு நெஞ்சைப் பதற வைக்கிறது. இதே நபர் நீண்டகாலமாகப் பல மாணவிகளை பாலியல் ரீதியாக அச்சுறுத்தி வரும் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் அதிர்ச்சியை அளிக்கிறது. இந்த குற்றவாளிக்கு உடனடியாகக் கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும்.
பெண்களுக்கெதிரான எந்த வகை குற்றமாக இருப்பினும் அதைப் பொறுத்துக்கொண்டு இருக்காமல், துணிச்சலுடன் வெளிக்கொண்டு வருவதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தித் தருவதும், அனைத்து தளங்களிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பான வாழ்வை உறுதி செய்வதும் நம் ஒவ்வொருவரின் கடமையாகும் என்று அவர் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை...நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு
தமிழகத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
அஜித்தை அடுத்து இயக்க போவது இவர் தானாமே...கதையையும் இப்பவே சொல்லிட்டாரே
விஜய் தான் களத்தில் இல்லை.. திடீரென வருகிறார்.. திடீரென காணாமல் போகிறார்: தமிழிசை செளந்தரராஜன்
ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைகள்... ஜன.,5ம் தேதிக்குள் வெளியிட சென்னை ஐகோர்ட் உத்தரவு!
கண்ணாடியே.. நான் வந்து நிற்கிறேன் உன் முன்னாடியே.. CONVERSATION WITH THE MIRROR!!
துப்புரவு பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம்...பொங்கல் பண்டிகை முதல் துவக்கம்
சற்று குறைந்தது தங்கம் விலை... தங்கம் மட்டும் இல்லங்க வெள்ளியும் இன்று குறைவு தான்!
மார்கழிப் பூவே.. மார்கழிப் பூவே.. The Significance of Marghazhi!
{{comments.comment}}