மதுரையில் அதிமுக மாநாடு.. தமிழ்நாடு முழுவதும் திமுகவின் நீட் போராட்டம்.. பரபரப்பு!

Aug 19, 2023,03:06 PM IST
சென்னை: மதுரையில் அதிமுக பிரமாண்ட மாநாட்டை நாளை நடத்தவுள்ள நிலையில் திமுக தமிழ்நாடு முழுவதும் நீட் தேர்வை எதிர்த்து பிரமாண்ட உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.

வீர வரலாற்றின் எழுச்சி மாநாடு என்ற பெயரில் மதுரையில் பிரமாண்ட மாநாட்டை அதிமுக நாளை நடத்தவுள்ளது. அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் அரசியல் மாநாடு என்பதால் அதிமுக தரப்பு பெரும் உற்சாகத்துடன் உள்ளது.



இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தொடங்கி நடந்து முடிந்துள்ளன. நாளை மாநாட்டுக்காக தற்போதே அதிமுகவினர் மதுரையில் குவியத் தொடங்கி விட்டனர். ஏற்பாடுகள் தடபுடலாக உள்ளன. மதுரை மாநாட்டில் 15 லட்சம் பேர் கலந்து கொள்���ார்கள்,இது பெரும் திருப்புமுனையாக அமையும், அடுத்த லோக்சபா தேர்தலில் இதன் தாக்கம் தெரியும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

இந்த நிலையில் நாளை திமுக பெரும் போராட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில்  நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் ஆளுநர் ஆர். என். ரவியின் போக்கைக் கண்டித்தும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளது திமுக. இந்த போராட்டத்தை திமுகவின் மாணவர் அணி, இளைஞர் அணி மற்றும் மருத்துவர் அணி ஆகியவை இணைந்து நடத்தவுள்ளன.

இந்த போராட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக மாநாடு நடைபெறும் சமயத்தில் அதே நாளில் திமுகவின் போராட்டமும் நடைபெறுவதால் தமிழ்நாடு முழுவதும் இப்போதே பரபரப்பாகியுள்ளது.

ஆனால் அதிமுக மாநாட்டை இருட்டடிப்பு செய்யவே திமுக வேண்டும் என்றே போராட்டத்தை அறிவித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,  மக்களை திசை திருப்பவும், அதிமுக மாநாட்டை இருட்டடிப்பு செய்யவுமே இந்தப் போராட்டத்தை திமுக அறிவித்துள்ளது.  அவர்கள்தான் நீட்டைக் கொண்டு வந்ததே.  இப்போது தங்களது தவறுகளை மறைக்க நாடமாடுகிறார்கள். நீட் குறித்துப் பேச திமுகவுக்குத் தகுதியே கிடையாது என்றார் அவர்.

சமீபத்திய செய்திகள்

news

நடிப்பு சலித்துவிட்டால்.... பார்ஸிலோனாவில் ஊபர் டிரைவராகிவிடுவேன்: மனம் திறந்த நடிகர் பகத் பாசில்

news

நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!

news

உழைப்பின் உயர்வு (கவிதை)

news

திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி

news

எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட சிறுமியை சீரழித்த கொடூரன்.. காப்பக உரிமையாளர் உள்பட 4 பேர் கைது

news

கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

முதல்வரின் கோரிக்கை மனு...தமிழகம் வரும் பிரதமரிடம் வழங்க போவது யார் தெரியுமா?

news

தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!

news

வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா

அதிகம் பார்க்கும் செய்திகள்