சென்னை: தமிழ்நாடு எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வீட்டைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் அவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை நீலாங்கரையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் இல்லத்தை சுற்றிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வீட்டின் நுழைவாயில் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், உதயநிதியின் வீட்டிற்குள் சென்றுள்ள காவல்துறையினர், அங்குள்ள அவரது குடும்பத்தினரிடம் தீவிரமாகப் பேசி விசாரணை நடத்தி வருகின்றனர். உதயநிதி வீட்டிற்குள் சென்ற போலீசாரிடம் முன்னாள் அமைச்சர் மா.சுப்ரமணியம், உதயநிதியின் மனைவி கிருத்திகை ஆகியோர் பேசி வருகின்றனர்.

வீட்டிற்குள் சென்ற போலீசார் உதயநிதியை பார்க்க வேண்டும் என கேட்டுள்ளனர். அதற்கு பதிலளித்த மா.சுப்ரமணியன், உதயநிதி வீட்டில் தான் இருகு்கிறார். வழக்கறிஞர் வந்த பிறகு அவரிடம் பேசலாம். அதற்குள் உதயநிதி எங்கும் ஓடி விட மாட்டார் என தெரிவித்துள்ளார். காவல்துறை ஆணையர் விஜயக்குமார், உதயநிதியை கைது செய்ய வந்திருகு்கிறோம் என கூறி உள்ளார். இது தொடர்பாக வீடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
நேற்று தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, பெண்களைப் பற்றி தவறாகவும் அவதூறாகவும் உதயநிதி ஸ்டாலின் பேசியதாக அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. முதல்வர் விஜய் குறித்தும், நடிகை த்ரிஷா குறித்தும் அவதூறாக பேசியதற்காக உதயநிதி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய மகளிர் ஆணையத்திலும் உதயநிதி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
உதயநிதியின் பேச்சிற்கு ஏற்கனவே அமைச்சர், அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாஜக மாநில துணை தலைவரான குஷ்பு, இதற்காக த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையில் உதயநிதி வீட்டின் முன்பு திமுக.,வினர் அதிக அளவில் குவிந்துள்ளனர். போலீசாருக்கும் திமுக.,வினருக்கும் மோதல் ஏற்பட்டு வருகிறது.
இதற்கிடையில் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய தடை கோரி உயர்நீதி மன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்க வெளியாகி உள்ளது. உதயநிதி வீட்டில் ஏற்கனவே போலீசார் குவிக்கப்பட்டுள்ள நிலையில், அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
கரும்பாக இல்லறம் இனிக்க காவேரி தாய் வேகமாய் வருகிறாள்!
உதயநிதி ஸ்டாலின் கைது : டெல்லியில் எம்.பிக்கள்.. தமிழ்நாடு முழுவதும் திமுக.,வினர் ஆர்ப்பாட்டம்!
தஞ்சாவூர் நிகழ்ச்சியில் சர்ச்சை பேச்சு: உதயநிதி ஸ்டாலின் சென்னையில் கைது
உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சாவூரில் தவெக மகளிர் அணி சார்பில் போலீசில் புகார்
வசவாளர்களை வாழ்க என சொல்லலாம்.. ஆனால் ஆபாசநிதிகளை.. அமைச்சர் என்.ஆனந்த் கண்டனம்
மெய்நட்பு!
பாசமும் நேசமும் பகிர்ந்த நினைவுகள் மனதில் இனிய நினைவுகளாய்!
நட்பற்ற வாழ்க்கையில் முழுமையாகாது நாளும்!
சிந்தனைச் சிதறல்.. புன்னகை ஒன்றையே விதைத்திடுவார்!
{{comments.comment}}