சென்னை : புதிய வாக்காளர்கள் திமுக பக்கம் உள்ளனர். கருத்துக் கணிப்புகள் என்ன சொன்னாலும் அவற்றை தாண்டி திமுக வெல்லும் என வெளிநாடு புறப்பட்டுச் செல்வதற்கு முன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசி உள்ளார்.
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் டாலராக உயர்த்துவதற்கான இலக்குடன், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை ஜெர்மனி மற்றும் பிரிட்டனுக்கு ஒரு வார கால அரசுமுறைப் பயணமாக புறப்பட்டுச் சென்றார். பயணத்திற்கு முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்தப் பயணம் புதிய முதலீடுகளை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் அவர் பேசும் போது, ஏற்கெனவே, தமிழக அரசு ரூ.10.62 லட்சம் கோடி மதிப்பிலான 922 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. இந்த வளர்ச்சிக்கு மத்திய அரசின் புள்ளிவிவரங்களே சான்று. தமிழ்நாட்டிற்கு பெருமுதலீடுகளை ஈர்க்க வெளிநாடுகளுக்கு செல்கிறேன். வாய்ப்புகளை உருவாக்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. தமிழகத்தில் புதிதாக 32.81 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கி உள்ளோம்.
திராவிட மாடல் ஆட்சியில் ரூ.10.62 லட்சம் கோடியில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 922 ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகி உள்ளன. புதிய கட்சிகள் திமுக பக்கம் வருகிறதோ இல்லையோ, புதிய வாக்காளர்கள் வருகின்றனரண. கருத்துக்கணிப்புகள் என்ன சொன்னாலும் அவற்றை மிஞ்சி திமுக வெல்லும் என தெரிவித்துள்ளார்.
காலை 9 மணி அளவில் சென்னையில் இருந்து புறப்படும் முதல்வர், நாளை ஐரோப்பாவில் மாபெரும் தமிழ்க்கனவு 2025 என்ற நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அதன்பின், அங்குள்ள தமிழர்களையும் சந்தித்து உரையாட உள்ளார். செப்டம்பர் 1ஆம் தேதி ஜெர்மனியில் இருந்து லண்டன் செல்லும் முதல்வர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார்.
லண்டனில் உள்ள தொழிலதிபர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்கவும் முதல்வர் அழைப்பு விடுக்க உள்ளார். செப்டம்பர் 4ஆம் தேதி ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் அயலக தமிழர் நல வாரியம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணங்களை முடித்துக் கொண்டு செப்டம்பர் 8ஆம் தேதி முதல்வர் சென்னை திரும்பவுள்ளார்.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}