Drumsticks: கிடுகிடு வென உயர்ந்து வரும் முருங்கை விலை.. கிலோ ரூ.100.. எப்படி சாம்பார் வைக்கிறது!

Nov 28, 2024,06:48 PM IST

சென்னை: சென்னையில் கோயம்பேடு சந்தையில் கிலோ முருங்கைக்காய் ரூ.100க்கு விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை உயர்வால் முருங்கைக்காய் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

முருங்கைக்காய் பெரும்பாலானவர்கள் விரும்பி சாப்பிடும் காய்களில் ஒன்று. முருங்கை மரத்தில் இருந்து பெறப்படும் இந்த காய், அதன் பூ, இலை ஆகியவை மருந்துவ குணமுடையதாகும்.  முருங்கைக்காய் மலச்சிக்கல், வயிற்றுப்புண், கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் மருந்தாக பயன்படுகிறது. முருங்கை காய் உடலுக்கு நல்ல வலுவைக் கொடுப்பதுடன், தாது உற்பத்தியை அதிகரிக்கிறது. இதை வாரம் 2 முறை சாப்பிட்டால் ரத்தமும், சீறுநீரக பாதையும் சுத்தம் அடையும். 



இந்தகைய மருத்துவ குணமுடைய முருங்கைக்காய் ஒரு காய்  ஒரு ரூபாய்க்கும், இரண்டு ரூபாய்கைக்கும் விற்கப்பட்டு வந்தது. இதனை அனைத்து தரப்பினர்களும் வாங்கி சமையலுக்கு பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக ஏழை எளிய மக்களின் பிரதான காயாகவும் இது இருந்து வருகிறது. சாம்பார் என்றால் முருங்கைக்காய் சாம்பார் தான். இதற்கு ஈடு  இணை வேறு எந்த சாம்பாரிலும் இல்லை என்று சொல்லலாம். அந்த சாம்பரின் மனம், சுவை இரண்டும் சூப்பராக இருக்கும். முருங்கைக்காய் சாம்பாரின் மனம் அண்டை அயலாரையும் சுண்டி இழுக்கும் தன்மை கொண்டது. 

இத்தகைய சிறப்புடைய முருங்கக்காய் சாமானிய மக்களின் முக்கிய உணவாக இருந்து வரும் நிலையில், தற்போது யானை விலை, குதிரை விலை என அதிகரித்து வருவதால், சாமானிய மக்கள் இந்த காயை விடுத்து விலை மலிவாக விற்கப்பட்டு வரும் காய்கறிகளை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். சாமானிய மக்கள் வாங்கும் விலையில் இருந்த இந்த முருங்கைக்காய் சென்னையில், கிலோ ரூ.100க்கும், மதுரையில் கிலோ ரூ.70 மற்றும் 80க்கும் விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை உயர்வால் முருங்கைக்காய் பிரியர்கள் கவலை அடைந்துள்ளனர்.

தற்போது, தமிழகத்தில் கனமழை பெய்து வருவதால் விளைச்சல் கணிசமாக குறைந்துள்ளது. இதனால், சுற்றுவட்டாரத்தில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தும் கணிசமாக குறைந்துள்ளது. அதேபோல் பனிப்பொழிவால் முருங்கைக் காயின் விளைச்சலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் சந்தைக்கு வரும் முருங்கைக்காயின் வரத்தும் மிகக் குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக கடந்த வாரம் ஒரு கிலோ முருங்கைக்காய் விலை 40 முதல் 50 வரை விற்கப்பட்டு வந்த விலை தற்போது கிடு கிடு என உயர்ந்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

IMD alert: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு.. அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழக்கும்.. அதி கன மழைக்கு வாய்ப்பு

news

திருவண்ணாமலை.. தீப மலையின் உச்சியை அடைந்தது தீபம் ஏற்றும் ராட்சத கொப்பரை!

news

3 மாவட்டங்களில் இன்று அதிகன மழைக்கான ரெட் அலர்ட்.. நாளை தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

news

Yearender 2024: அஜீத்தால் பிரபலமடைந்த அஜர்பைஜான்.. அதிகம் கூகுள் செய்யப்பட்ட நாடு இதுதான்!

news

Yearender 2024: நாக்கில் வச்சதும்.. நச்சுன்னு சுவைக்கும் மாங்காய் ஊறுகாய்க்கு.. தேடுதலில் 2வது இடம்!

news

கார்த்திகை தீபத் திருநாள் ஸ்பெஷல் நைவேத்தியம்...கார்த்திகை பொரி பற்றி இதெல்லாம் தெரியுமா?

news

ஆங்கில புத்தாண்டு 2025 ராசிபலன் : மேஷம் ராசி வாசகர்களே.. இந்த வருஷம் உங்க வருஷம்.. ஜமாய்ங்க!

news

திருக்கார்த்திகை தீபத் திருநாள் 2024: எந்த நேரத்தில், எப்படி விளக்கேற்ற வேண்டும்?

news

Yearender 2024: இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட.. நபர்கள், விளையாட்டுகள்.. இதோ லிஸ்ட்!

அதிகம் பார்க்கும் செய்திகள்