டெல்லி: திருமணங்களை வெளிநாடுகளில் வைக்காமல் இந்தியாவிலேயே வைத்தால் இந்திய பொருளாதாரம் மேம்படும். திருமணத்திற்காக பொருட்கள் வாங்கும்போது, இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். அது நியாயமான கருத்துதான் என்று பலரும் கூறியுள்ளனர்.
எந்த நாட்டில் வேலை செய்து வந்தாலும், வசித்து வந்தாலும், கடைசியில் திருமணம் என்றால் தங்கள் பிறந்த ஊரில் வைப்பதை தான் வழக்கமாக எல்லாரும் பின்பற்றி வந்தார்கள். சிலர் பிறந்த ஊரை விட்டு வந்து நிறைய ஆண்டுகள் ஆகி விட்டதால், தாங்கள் தற்சமயம் வசித்து வரும் ஊரில் திருமணங்களை நடத்துவதும் வழக்கமாகி விட்டது. இப்போது அதுவும் மாறி வெளிநாடுகளில் திருமணம் செய்து கொண்டு வர ஆரம்பித்து விட்டனர்.
மிகவும் செல்வச் செழிப்பில் உள்ளவர்கள் வெளிநாடுகளில் திருமணம் செய்வதை கெளரவம் என்று தற்பொழுது நினைத்து வருகின்றனர். குறிப்பாக இந்திய பிரபலங்கள் பலரும் வெளிநாடுகளில் அதிகளவில் திருமணம் செய்து கொள்கின்றனர். தீபிகா படுகோனே- ரன்வீர் சிங், அனுஷ்கா ஷர்மா - விராத் கோலி, ராணி முகர்ஜி - ஆதித்யா சோப்ரா, அம்பானி மகன்கள் திருமணம் என்று செல்லிக்கொண்டே போகலாம். இதனால் இந்திய பணம் வெளிநாடுகளுக்கு செல்கிறது.
இன்னும் சிலர் சுற்றுலாத்தலங்கள் நிரம்பிய நாடுகளுக்குப் போய் வித்தியாசமான முறையில் திருமணம் செய்கின்றனர். அதாவது விமானத்தில் பறந்தபடி, பாராசூட்டிலிருந்து குதித்து கல்யாணம் செய்வது, நீருக்குள் மூழ்கியபடி கல்யாணம் செய்வது என்று வித்தியாசமாக யோசித்து கல்யாணம் செய்கின்றனர்.
இதைத் தான் மன் கி பாத் நிகழ்ச்சியின் மூலமாக மோடி போசியுள்ளார். ஓவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றி வருவது அனைவரும் அறிந்ததே.
இந்த மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையில் பேசும் போது, இந்தியர்கள் சிலர் திருமணங்களை வெளிநாடுகளில் வைக்கின்றனர். இது தேவை தானா? நமது நட்டிலேயே திருமணங்களை நடத்தினால், இந்திய பணம் இந்தியாவிலேயே இருக்கும். இந்திய பணம் வெளியே எங்கும் செல்லாமல் நாட்டுக்குள்ளேயே இருக்கும். ஆகவே மக்கள் அனைவரும் வெளிநாடுகளில் திருமணங்கைள நடத்தாமல் நாட்டுக்குள்ளே திருமண கொண்டாட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியதுடன் திருமணத்திற்கான பொருட்கள் வாங்கும்போது, இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதனால் நாட்டின் பொருளாதாரம் உயரும் என்று தெரிவித்துள்ளார்.
நியாயமான கருத்துதான்..!
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}