அதிமுக.,வில் முற்றும் மோதல்... கே.சி. வீரமணி மனமாற்றம்.. ஆளுநரை சந்திக்க இபிஎஸ் திட்டம்

May 15, 2026,06:50 PM IST

சென்னை: அதிமுகவிற்குள் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல்களும், அதையொட்டி அரங்கேறி வரும் அரசியல் நகர்வுகளும் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஆளுநரைச் சந்திக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் திடீர் மனமாற்றம் அக்கட்சிக்குள் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


அதிமுகவில் உள்ள அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ.க்கள்) மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, ஆளுநர் மாளிகையில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் நேற்று முறைப்படி புகார் ஒன்று அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேக்கரை விரைவில் நேரில் சந்தித்துப் பேச எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். 


தற்போது கேரளா முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காகச் சென்றுள்ள ஆளுநர் அர்லேக்கர், அங்கிருந்து தமிழகம் திரும்பியவுடன் இந்தச் சந்திப்பு உடனடியாக நடைபெறும் எனத் தெரிகிறது. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீதான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் குறித்து இந்தச் சந்திப்பில் ஈபிஎஸ் விரிவாக விவாதிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.




இதற்கிடையே, தமிழக சட்டசபையில் அதிமுக.,விற்கு கொறடா நியமனம் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பு, எஸ்.பி.வேலுமணி தரப்பு என இரு தரப்பினரும் சட்டசபை சபாநாயகரிடம் தனித்தனியாக கோரிக்கை மனுக்களை அளித்திருந்தனர். இந்த இரு தரப்பும் அளித்த மனுக்கள் பரிசீலனையில் உள்ளதாக சபாநாயகர் பிரபாகர் இன்று அறிவித்துள்ளார்.


கே.சி.வீரமணியின் திடீர் மனமாற்றம்:


இத்தகைய பரபரப்பான சூழலுக்கு மத்தியில், திருப்பத்தூர் மாவட்டச் செயலாளராகப் பதவி வகித்து வந்த முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி அந்தப் பொறுப்பில் இருந்து அதிரடியாக மாற்றப்பட்டார். இதனால் அவர் அதிருப்தி அணியான எஸ்.பி.வேலுமணி தரப்பிற்கு ஆதரவு தெரிவிக்கக் கூடும் என்று அரசியல் வட்டாரங்களில் பலத்த ஊகங்கள் எழுந்து வந்தன.


ஆனால், அனைவரது எதிர்பார்ப்புகளையும் தலைகீழாக மாற்றி, கே.சி.வீரமணி தற்போது தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ளதாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து மாற்றப்பட்ட போதிலும், பொதுச்செயலாளர் இ.பி.எஸ் எடுக்கும் ஒழுங்கு நடவடிக்கைகளுக்குத் தான் முழு ஆதரவு அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். சட்டமன்ற நிகழ்வுகளின் போது இ.பி.எஸ் பின்னால் அவர் உறுதியுடன் நிற்கும் காட்சிகள், அவர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையையே முழுமையாக ஏற்பதை உறுதிப்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கதை அல்ல நிஜம்.. "ரோஷினியின் டைரி" .. அவள் எழுதிய வரிகள் நிஜமானது!

news

Sunday Special: சுவையான மக்ரூனி பிரியாணி.. சாப்ட்டுப் பாருங்க.. கிறங்கிப் போய்ருவீங்க!

news

கதை கேளு... கதை கேளு!

news

Malliga Selvaraj: அன்னை மடி!

news

தென்தமிழ் தலையங்கம்: திரைக்கலைத் தாத்தா சிங்கீதம் சீனிவாச ராவ்!

news

Asiad 2026 Cricket: தங்க மகளிரைப் பின்பற்றி.. பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய ஆடவர்!

news

தவெக வேட்பாளர் குறித்து உருவக் கேலி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கண்டனம்!

news

தாராபுரம் தவெக வேட்பாளரை உருவகேலி செய்த விவகாரம் : மு.க.ஸ்டாலின் மீது புகார்

news

மதுராந்தகம் இடைத்தேர்தல்: செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்

அதிகம் பார்க்கும் செய்திகள்