இந்திய ராணுவ வீரர்கள் சூப்பர்...  எகிப்து ராணுவக் குழு பெரும் மகிழ்ச்சி!

Jan 26, 2023,01:12 PM IST
டெல்லி: கடந்த சில நாட்களாக இந்தியாவில் தங்கியுள்ளோம். இந்திய ராணுவத்தினர் எங்களை மிகச் சிறப்பாக கவனித்துக் கொள்கின்றனர். எங்களது நாட்டில் இருக்கும் உணர்வுதான் உள்ளது என்று இந்தியா வந்துள்ள எகிப்து ராணுவக் குழு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.



இந்தியாவின் 74வது குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. டெல்லியில் நடக்கும் குடியரசு தின விழா அணிவகுப்பில் எகிப்து நாட்டு ராணுவக் குழுவும் பங்கேற்றுள்ளது. இந்தியாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் எகிப்து ராணுவக் குழு பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.

இதற்காக சில நாட்களுக்கு முன்பே எகிப்து ராணுவக் குழு டெல்லி வந்து விட்டது. மொத்தம் 144 பேர் இதில் இடம் பெற்றுள்ளனர். இந்தக் குழுவின் தலைவர்  கர்னல் மஹமூது முகம்மது அப்தெல்பட்டா எல்கரஸாவி கூறுகையில்,  இந்தியா மாபெரும் நாடு. இது எங்களது முதல் இந்திய பயணம். எகிப்தைப் போலவே, இந்தியாவும் மிகவும் சிறப்பான நாகரீகத்தைக் கொண்ட நாடு.  கடந்த சில நாட்களாக இங்கு தங்கியுள்ளோம். இந்திய ராணுவத்தினர் எங்களை மிகச் சிறப்பாக கவனித்துக் கொண்டனர். எங்களது நாட்டில் இருப்பது போலவே உணர்கிறோம் என்றார் அவர்.

இந்திய குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்து கொள்வது குறித்து எகிப்து ராணுவக் குழுவினர் அனைவருமே பெரும் மகிழ்ச்சியுடனும், ஒரு விதமான நெகிழ்ச்சியுடனும் உள்ளனர். எகிப்து ராணுவத்தின் மகிமையை உலகமே பார்க்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்துள்ளது. அதற்காக இந்தியாவுக்கு நன்றி என்று அவர்கள் கூறியுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

news

அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி

news

தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!

news

மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!

news

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

news

இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!

news

தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

news

மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

news

தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்