- கி. அனுராதா
பேருந்து நிலையத்தில் மிகுந்த கூட்டம். சிறப்பு விடுமுறையால் கூட்டம் அலை மோதியது. வரும் பேருந்துகளும் மக்களால் நிரம்பி படிக்கட்டுகள் வரை வந்து நின்றது. பொழுதோ இருட்ட துவங்கியது. பயம் மெல்ல வரட்டுமா என்று எட்டி பார்த்து எள்ளி நகையாடியது.
கண்களும் நீரால் நிரம்ப தயாரானது. மூன்று மணி நேரம் கழிந்து விட்டது. பயத்தால் கண்களில் நீரை நிரம்பியது. என்ன செய்வதென்றே அறியாமல் திகைத்து இருந்த நேரம் எனக்கு மிக அருகில் கார் நிற்கும் சப்தம்.
அனைவரும் எவ்வளவு கேட்டாலும் பரவாயில்லை, ஊர் சென்றால் போதும் என்று ஓட்டுனரை அணுகினர். அவரோ இது என் சொந்த கார். ஆகையால் விலகிச் செல்லுங்கள் என்றார். காரின் சொந்தகாரர் என்னை நோக்கி நகர்ந்து வந்து " மேடம் வாங்க போகலாம் உங்களை வீட்டிலேயே விடுகிறேன்" என்றார். எனக்கோ தயக்கம் குழப்பம். யார் இவர்? என்னை எப்படி தெரியும் ? என் வீடு எப்படி தெரியும் என்ற படி கேட்டு விடுவோம் என்பதற்குள் என்னை தெரியவில்லையா என அவர் முந்திக் கொண்டு கேட்டார். ஐயா மன்னியுங்கள் தாங்கள் யார் என்றேன்.
அவரோ பதறியபடி மன்னிப்பதா.. அம்மா தாங்கள் என் ஆசிரியர். பத்தாம் வகுப்பில் அனைவரும் தேர்ச்சிப் பெற்ற பொழுது நான் தோற்று நின்று வாழ்க்கையே வெறுத்து நின்றேன். அப்பொழுது தான் நீங்கள் படிப்பு மட்டும் தான் வாழ்க்கை இல்லை. உன்னிடம் இசை ஆர்வம் இருக்கிறது, வளர்த்துக் கொள் என்று கூறினீர்கள். அதன் பயன் இன்று என் கீழ் 15 பேருடன் திருமணத்திற்கு விழாவிற்கு இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறேன் என்றார்.

இதைக் கேட்டு நான் மலைத்துப் போய் நின்றேன்.. அவரோ தொடர்ந்து பேசினார்.. அன்று நீங்கள் என்னை தேற்றவில்லை என்றால் துவண்டு போய் இருப்பேன். மேடம் , எனக்கு திருமணமாகி ஒரு குழந்தையுடன் சந்தோஷமாய் உள்ளேன். இதற்கு இந்த சந்தோஷத்திற்கு நீங்கள் மட்டுமே காரணம் என்று என் கை பற்றி காரில் அமர வைத்தார். மூன்று மணி நேரம் சுகமான இதமான சந்தோஷ உரையாடலுடன் கழிந்து என் வீட்டு வாசலில் நின்றது.
விடைப்பெற்ற அக் காரை திரும்பப் பார்த்தேன். என்றோ விதைத்தது இன்று எனக்கு பயன் தந்தது. எவ்வாறு வீடு திரும்புவோம் என்ற பயம் சந்தோஷத்தால் முடிவு பெற்றது. தனக்கு தன்னை முந்திக் கொண்டு செல்லும் மாணவர்கள் வெற்றி பெற்றால், மிக சந்தோஷம். வாழ்வில் அடுத்தடுத்து முன்னேறி செல்வதைக் கண்டு பொறாமைப்படாத ஒரே இனம் ஆசிரியர் மட்டுமே. இதில் பெருமையும் கர்வமும் அடங்கியுள்ளது.
(சிறுகதையைத் தீட்டிய கி. அனுராதா ஒரு ஆசிரியை. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எம்.ஏ பட்டங்களைப் படித்துள்ளார். இந்தியில் பிஏ முடித்துள்ளார். இதுதவிர 7 டிப்ளமோக்களும் இவரது கல்விச் சொத்தில் அங்கம். 2 பெண் குழந்தைகள், கணவர் விவசாயி. ரத்னா செந்தில்குமாரின் திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : நான்கு முனை போட்டி உறுதியானது
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் தள்ளிவைப்பு: அமைச்சர் அருண்ராஜ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இதுதான் சூப்பர் Couple Goal.. மனைவி மாநகராட்சி ஆணையர்.. கணவர் எஸ்.பி.. வேலூரில்!
சர்வதேச சுடோகு தினம் .. மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர் விளையாட்டு!
"லட்க்கி கொய்லா கொஞ்சம் கொடுப்பா".. நாக்பூரை பதற வைத்த மெட்ராஸ்!
சிந்தனைச் சிதறல்.. வடிப்பது சிற்பம் தான் என்றாலும்.. சிறுகச் சிறுக சிதைக்கும் உளிகள்!
சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை!
காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: நகராட்சி சார்பில் மாணவர்களுக்கு தட்டு, டம்ளர் வழங்கல்
{{comments.comment}}