சென்னை: ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டசபை உறுப்பினரும், முன்னாள் காங்கிரஸ் தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் இன்று மாலை முழு அரசு மரியாதைகளுடன் தகனம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு தொடர்ந்து பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று விரைந்து சென்று அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், முக்கியப் பிரமுகர்கள் என பல தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இன்று பொதுமக்கள் அஞ்சலிக்கு உடல் வைக்கப்படவுள்ளது. அதன் பின்னர் மாலையில் உடல் தகனம் நடைபெறவுள்ளது. ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும். அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தந்தை பெரியார் ஈ வே ராமசாமி அவர்களின் அண்ணன் ஈவே கிருஷ்ணசாமியின் பேரனும் ஈவேகி சம்பத் சுலோச்சனா சம்பத் மகனும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈவேகிச இளங்கோவன் 14. 12. 2024 அன்று இயற்கை எய்தினார். கடந்த 21.12.1948-இல் ஈரோட்டில் பிறந்த இவர் இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்தின் தமிழ்நாடு மாநில தலைவராக 1996 முதல் 2002 வரை பணியாற்றினார்.
2004ல் நாடாளுமன்ற உறுப்பினராக கோபிசெட்டிபாளையம் மக்களவைத் தொகுதியில் இருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் ஒன்றிய அரசில் ஜவுளித்துறை இணை அமைச்சராக பொறுப்பேற்று சிறப்பான முறையில் பணியாற்றினார். தமிழ்நாட்டு அரசியல் மட்டுமல்லாது இந்திய அரசியலிலும் சிறப்பாக மக்கள் பணியாற்றினார். அரசியல், மக்கள் பணி, பொது வாழ்வு என அனைத்து தளங்களிலும் நீண்ட அனுபவம் கொண்டவர்.
தன் சிந்தனைக்கு சரியாகப்பட்டதை துணிவுடன் வெளிப்படுத்தியவர். அவரை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களுக்கும் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுக்கும் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி மக்களுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அவரது பொது வாழ்வை போற்றும் விதமாக அவரது திருஉடலுக்கு அரசு மரியாதை உடன் பிரியாவிடை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அனைவரும் கம்பி எண்ணப்போவது உறுதி: எடப்பாடி பழனிச்சாமி
அப்பா வின் ஆட்சியில் தொடர்ந்து காணாமல் போகும் அப்பாவி குழந்தைகள்: நயினார் நாகேந்திரன்
புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?
என் திரை வாழ்வை சீர்குலைக்க நடந்த சதி செயல்: நடிகர் திலீப் பேட்டி
ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு
பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற திருகொண்டீஸ்வரம் .. பசுபதீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர யாகம்
எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?
{{comments.comment}}