சென்னை: இந்த நிமிடத்தில் கோலிவுட்டில் மிகப் பெரிய பிரமாண்ட பட நிறுவனமாக விளங்கி வரும் அந்த நிறுவனம் படத் தயாரிப்பை நிறுத்தி விட திட்டமிட்டு வருவதாக ஒரு தகவல் வெளியாகி கோலிவுட்டில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்கள். கால ஓட்டத்தை சமாளித்துக் கொண்டு செயல்படக் கூடியவர்கள் மட்டுமே தாக்குப் பிடிக்க முடியும். தமிழ்த் திரையுலகில் எத்தனையோ படத் தயாரிப்பு நிறுவனங்கள் இருந்தன. அவற்றில் இப்போது வரை இருக்கக் கூடியவை என்று பார்த்தால் ஜீரோ என்றுதான் சொல்ல வேண்டும்.

ஏவிஎம் நிறுவனம் இப்போது படத் தயாரிப்பில் ஈடுபடுவதில்லை. அதேபோல பல முன்னணி நிறுவனங்கள் பலவும் கூட தயாரிப்பை விட்டு விட்டன. தயாரிப்புச் செலவு அதிகமாக இருப்பது, நடிகர்களின் சம்பளம் அதிகமாக இருப்பது என பல காரணங்களை இதற்குச் சொல்லலாம்.
புதிதாக வந்த பட நிறுவனங்களும் கூட குறிப்பிட்ட காலம் வரைக்கும்தான் இருக்கின்றன. அதன் பிறகு அவை மெல்ல மெல்ல வீழ்ந்து மறைந்து போவதையும் பார்க்க முடிகிறது. ஏவி.எம் நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை படத் தயாரிப்பில் இருந்த நிறுவனம்தான். ஆனால் சில பத்தாண்டுகளில் உருவாக்கப்பட்ட, உருவாகி வெளி வந்த பல பட நிறுவனங்கள் இப்போது காட்சியிலேயே இல்லை.
இந்த நிலையில் தற்போது கோலிவுட்டில் பிரபலமாக உள்ள ஒரு படத் தயாரிப்பு நிறுவனம் திரைப்படத் தயாரிப்பை நிறுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளதாம். இந்த நிறுவனத்திற்குத் தேவையான நிதியைக் கையாண்ட நபர் தற்போது பெரும் பிரச்சினையில் சிக்கியுள்ளதால், நிறுவனத்தின் பண வரவு பாதிக்கப்பட்டுள்ளதாம். மேலும் பல்வேறு சட்ட சிக்கல்களும் வரும் அபாயம் இருப்பதால் பேசாமல் எல்லாவற்றையும் நிறுத்தி விடலாம் என்ற எண்ணத்தில் அந்த நிறுவனம் உள்ளதாம்.
தற்போது முக்கியமான 3 படங்களை இந்த நிறுவனம் கையில் வைத்துள்ளது. இவற்றை முடித்த பிறகு தயாரிப்பை நிறுத்தி விட அது தீர்மானித்துள்ளதாம். இந்தத் தகவல் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிறுவனத்துக்கே இந்த கதியா என்று பலரும் ஆச்சரியமாக கேட்கிறார்களாம்.
தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அலர்ட்!
பசி,பட்டினியை போக்கவில்லை... தீபம் ஏற்ற வேண்டும் என கூறுகிறார்கள்: சீமான் ஆவேசம்!
வானுயர் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
மெஸ்ஸியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஆவேசம்... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி!
திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்கள்: அன்புமணி ராமதாஸ் வேதனை!
ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!
Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!
சினிமாத் துறையினரை தொடர்ந்து பாதிக்கும் மன அழுத்தம்.. உரிய கவுன்சிலிங் அவசியம்!
Amma's Pride ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் சென்னையில் உருவான குறும்படம்!
{{comments.comment}}