ஃபெஞ்சல் புயல் + கன மழை எதிரொலி.. சென்னையில் 9 சுரங்கப்பாதைகள் மூடல்.. தாம்பரத்திலும் பாதிப்பு!

Nov 30, 2024,03:19 PM IST

சென்னை: சென்னையில் கனமழை காரணமாக மழை நீர் சூழ்ந்துள்ள 9 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன.  அதேபோல கிழக்குத் தாம்பரம், ஜிஎஸ்டி சாலை இணைப்பு சுரங்கப் பாதையும் நீரால் சூழப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்ட ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், நேற்று ஃபெஞ்சல் புயலாக மாறியது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது. சென்னையில் நேற்று தொடங்கிய மழை விடிய விடிய கொட்டி தீர்த்து வருகிறது. சென்னையில் கனமழை பெய்து வருவதால் யாரும் வீட்டை விட்டு தேவையில்லாமல் வெளியில் வரவேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை  முடங்கியுள்ளது. புயல் காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. போக்குவரத்து வாகனங்கள் சாலைகளில் செல்ல முடியாமல் ஸ்தம்பித்து உள்ளன. இந்நிலையில் சென்னையில் உள்ள 21 சுரங்கப் பாதைகளில் 12 சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கவில்லை என்று மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கி இருப்பதால், 9 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. அவை, 

* எழும்பூர் கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை 

* ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை

* ஆர்.பி.ஐ. சுரங்கப்பாதை

* பெரம்பூர் சுரங்கப்பாதை

* பழவந்தாங்கல் சுரங்கப்பாதை

* திருவொற்றியூர் அஜாக்ஸ் சுரங்கப்பாதை

* துரைசாமி சுரங்கப்பாதை

* மேட்லி சுரங்கப்பாதை

* சுந்தரம் பாயிண்ட் சுரங்கப்பாதை

ஆகிய 9 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன.


இதேபோல தாம்பரத்திலும் ரயில்வே சுரங்கப் பாதையில் நீர் நிரம்பிக் காணப்படுகிறது. கிழக்கு தாம்பரம் - ஜிஎஸ்டி சாலையை இணைக்கும் சுரங்கப் பாதை இது. இது நிரம்பியிருப்பதால் தண்ணீரை வெளியேற்றும் பணிகள் நடந்து வருகின்றன. சுரங்கப் பாதை மூடப்பட்டதால் மக்கள் ரயில்வே மேம்பாலத்தின் வழியாக பயணித்து வருகின்றனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மீனவர்களை விடுவிக்கக்கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

news

SIR வேண்டாம் என்று திமுக உச்ச நீதிமன்றம் சென்றால், அதிமுக SIR வேண்டும் என செல்வோம்: ஜெயக்குமார்

news

தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை விஜய் வலியுறுத்தல்!

news

கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்: சென்னை தவெக அலுவலகத்தில் சிபிஐ விசாரணை!

news

அரசியல் பொதுக்கூட்ட விதிமுறைகள்.. நவ., 6ல் அனைத்துக் கட்சி கூட்டம்: தமிழ்நாடு அரசு!

news

சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம்!

news

கோவை விமான நிலையம் அருகே அதிர்ச்சி... மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை!

news

'NO' சொல்ல தயக்கமா?.. தயங்காமல் சொல்லுங்க.. சொல்ல வேண்டிய இடத்தில்!

news

ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே.. இரவானால் பகல் ஒன்று வந்திடுமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்