வாரிசு, கேம்சேஞ்சர் பட தயாரிப்பாளர்.. தில் ராஜு வீட்டில்.. வருமானவரித்துறை திடீர் சோதனை!

Jan 21, 2025,11:06 AM IST

ஹைதராபாத்: பிரபல திரைப்பட தயாரிப்பாளரான தில் ராஜுவின் வீடு உட்பட எட்டு இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். இதனால் தெலுங்கு திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.


தில் ராஜு பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். இவர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். தமிழில் வாரிசு படத்தை எடுத்தவர் இவர்தான். அதேபோல சமீபத்தில் வெளியான கேம் சேஞ்சர் படத்தையும் இவரே தயாரித்துள்ளார். சமீபத்தில்தான் தெலங்கானா திரைப்பட மேம்பாட்டு கழகத்தின் தலைவராக தில் ராஜூ நியமிக்கப்பட்டுள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது.


கடந்த ஆண்டு தெலுங்கு இயக்குனர் வம்சி  இயக்கத்தில் விஜய் மற்றும் ராஸ்மிகா மந்தனா நடிப்பில் உருவான வாரிசு திரைப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் தயாரித்திருந்தார் தில் ராஜு. இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு தொடக்கத்தில் ராம்சரண் நடிப்பில் கேம் சேஞ்சர் மற்றும் சங்கராந்திகி வஸ்துனம் ஆகிய படங்களையும் தயாரித்துள்ளார்.  




ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு இணங்க,பொங்கல் பண்டிகையை  முன்னிட்டு, கேம் சேஞ்சர் ஜனவரி 10 ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகி வெற்றி நடைபோட்டு வருகிறது. அதேபோல் சங்கராந்திகி வஸ்துன்னம் ஜனவரி 14-ஆம் தேதி வெளியாகி தெலுங்கு பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் சாதனை படைத்து வருகிறது.


இதற்கிடையே  திறமையான புதிய தயாரிப்பாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் ட்ரீம்ஸ் பேனரை தொடங்கினார். இதன் மூலம் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் என யார் வேண்டுமானாலும் தில்ராஜு குழுவை அணுகி தங்களின் திறமைகளை வெளிக்கொண்டு வர வகை செய்யப்பட்டுள்ளது.


இந்த நிலையில் தயாரிப்பாளர் தில் ராஜுவின் ஹைதராபாத் வீடு அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். அவரது மகன் மற்றும் உறவினர்கள் வீடு உட்பட எட்டு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். எதற்காக இந்த திடீர் சோதனை என்ற விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியா நீங்க.. அப்படீன்னா உங்களுக்கு ஒரு குட் நியூஸ்!

news

நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலையார்.. திருவண்ணாமலை கோவில் சிறப்புகள்!

news

அந்த மழைத் துளிகளின் சத்தம் முழுவதும்...!

news

முழுமை - படைப்பின் நியதி (Perfection is the order of Life)

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 28, 2025... இன்று இடமாற்றங்கள் ஏற்படும் நாள்

news

இலங்கை அருகே.. மலைகளுக்கு இடையே மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் டித்வா புயல்..!

news

தமிழ்நாட்டை நோக்கி நகரும் புயல்.. மழை அதிகரிக்கும்.. நவம்பர் 30ம் தேதி சென்னைக்கு ரெட் அலர்ட்!

news

நவம்பர் 30ம் தேதி காலை டித்வா புயல் கரையை கடக்கும்...சென்னை வானிலை மையம்

news

தவெக.,வில் இணைந்தார் கே.ஏ.செங்கோட்டையன்.. நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமனம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்