சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து... பல இடங்களில் இணைய மற்றும்108 சேவை பாதிப்பு!

Dec 20, 2025,01:30 PM IST

சென்னை: சென்னையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டதால், பல இடங்களில் இணைய சேவையும், 108 சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.


சென்னை அண்ணா சாலையில் உள்ள தென் மண்டல பிஎஸ்என்எல் அலுவலத்தில் இன்று திடீர் என தீ பற்றி எரிந்தது. பிஎஸ்என்எல்லுக்கு சொந்தமான இந்த 8 மாடி கட்டிதத்தில் 2ம் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டு தீ மளமளவென பரவியது. 10 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டனர்.




பிஎஸ்என்எல் அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் சென்னையில் பல இடங்களில் இணைய சேவை மற்றும் 108 சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்துதல், நேரடியாக மின்சார அலுவலகத்திற்கு வந்து மின் கட்டணம் செலுத்ததுல் போன்ற சேவையில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் மின்சாரம் தொடர்பான புகார் அளிக்கும் மின்னகம் சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 


விபத்து ஏற்பட்டது காலை நேரம் என்பதால் ஒரு சில உழியர்களே இருந்தனர். அவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து அறிந்த போலீசார் விரைந்து வந்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மின்கசிவே தீ விபத்திற்கு காரணமாக கூறப்பட்டுள்ளது. இத தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

களத்தில் யார் இருக்கா? விஜய் பேசுறதை எல்லாம் சிரிச்சிட்டு கடந்துடணும்: சீமான் பதில்!

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு

news

செவிலியர்களின் சாபம் திமுக அரசை இனி அரியணை ஏறவிடாது: நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

news

அச்சச்சோ கரண்ட் போயிருச்சே.. கவலைப்படாதீங்க.. இந்தா பிடிங்க.. இன்ஸ்டன்ட் சட்னி!

news

எதையாவது எழுதலாமே!?

news

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து... பல இடங்களில் இணைய மற்றும்108 சேவை பாதிப்பு!

news

நாங்கள் களத்தில் இருக்கின்றோமா இல்லையா என்பதை தேர்தல் முடிவுகள் தீர்ப்பளிக்கும்: செங்கோட்டையன்

news

உறவுமுறைகளும், இன்றைய குழந்தைகளும்!

news

தங்கம் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா? இதோ முழு விபரம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்