சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை மட்டும் இல்லீங்க, தேங்காய் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது.
சென்னை மட்டும் இன்றி தமிழகம் முழுவதிலும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. வட மாநிலங்களில் தற்போது கடுமையான மழை பெய்து வருவதால் தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தக்காளியின் வரத்து கணிசமாக குறைந்துள்ளது.வரத்து குறைவால் தக்காளி விலை எகிறி வருகிறது. நேற்று ரூ.110 விற்கப்பட்ட தக்காளி இன்று ரூ.120க்கு விற்கப்பட்டு வருகிறது.
தக்காளியை தொடர்ந்து தேங்காய் விலையும் தற்போது அதிகரித்து வருகிறது. முன்னர் எல்லாம் ஒரு தேங்காய் இவ்வளவு என்று விற்கப்பட்டு வந்தது. தற்போது அந்த நிலை மாறி ஒரு கிலோ தேங்காயின் விலை ரூ.20 முதல் 30 என்று இருந்தது, தற்போது கிலோ தேங்காய் ரூ.60 முதல் ரூ.80க்கு விற்கப்பட்டு வருகிறது.

தேங்காய் வரத்து குறைவினால், இளநீர் விலையும் அதிகரித்துள்ளது. முதலில் பூண்டு விலை உயர்ந்தது. இதனையடுத்து தக்காளி, தேங்காய் என தொடர்ந்து ஒவ்வொன்றாக உயர்ந்து வருவதினால், இல்லத்தரசிகள் என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி வருகின்றனர்.
இன்றைய காய்கறி விலை....
தக்காளி ரூ 90-120
இஞ்சி 60-180
நெல்லிக்காய் 70-76
பீன்ஸ் 38-150
பீட்ரூட் 40-80
பாகற்காய் 15-30
கத்திரிக்காய் 15-80
பட்டர் பீன்ஸ் 56-85
முட்டைகோஸ் 15-60
குடைமிளகாய் 10-30
கேரட் 45-82
காளிபிளவர் 20-40
சௌசௌ 10-25
கொத்தவரங்காய் 25-40
தேங்காய் 60-80
பூண்டு 180- 450
பச்சை பட்டாணி 130-160
கருணைக்கிழங்கு 25-50
கோவக்காய் 10-15
வெண்டைக்காய் 20-40
மாங்காய் 100-180
மரவள்ளி 40-55
நூக்கல் 15-40
பெரிய வெங்காயம் 25-72
சின்ன வெங்காயம் 70-90
உருளை 36-80
முள்ளங்கி 15-35
சேனைக்கிழங்கு 60-65
புடலங்காய் 20-30
சுரைக்காய் 15-30
பூசணி 15-20
முருங்கைக்காய் 30-120
இன்றைய பழங்களின் விலை நிலவரம்
ஆப்பிள் 120-260
வாழைப்பழம் 15-110
மாதுளை 120-300
திராட்சை 70-140
மாம்பழம் 30-200
தர்பூசணி 15-40
கிர்ணி பழம் 25-80
கொய்யா 24-100
நெல்லிக்காய் 25-80
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
தமிழக காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் செல்கிறது: ஜோதிமணி எம்.பி.,
அச்சச்சோ.. ஆமாங்க இப்ப தாங்க வலிக்குது.. தங்கமே தங்கம்!
பராசக்திபட வெளியீட்டிற்கு தடை விதக்க மறுப்பு: சென்னை உயர்நீதிமன்றம்
ஜனநாயகன்: ஜனவரி 4 முதல் டிக்கெட் முன்பதிவு ஆரம்பம்
தமிழ்ப் படத்துக்கு தமிழ்நாட்டில் தியேட்டர்கள் இல்லை.. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி குமுறல்!
வைகோ நடைபயணம்... திருச்சியில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
கடந்த 4 நாட்கள் சரிவிற்கு பின்னர் இன்று மீண்டும் தங்கம் விலை உயர்வு..சவரனுக்கு ரூ.1,120 உயர்வு!
ஏறிக் கொண்ட போகும் தங்கம் விலை.. காரணம் என்ன.. இதுக்கு என்ட் கார்டே கிடையாதா?
{{comments.comment}}