சென்னை: தமிழ்நாட்டில் ஃபோர்டு நிறுவனம் தனது ஆலையை மீண்டும் தொடங்க இருக்கிறது.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டில் இருந்து வெளியேறிய ஃபோர்டு மீண்டும் தமிழ்நாட்டில் தனது தொழிற்சாலையை தொடங்குகிறது. ஃபோர்டு தனது சென்னை ஆலையை ஏற்றுமதி சந்தைகளுக்குத் தயாரிக்கும் வாகனங்களை தயாரிக்கும் திட்டத்தை உறுதிப்படுத்தும் வகையில், தமிழக அரசிடம் அதிகாரப்பூர்வமாக ஒரு கடிதத்தை சமர்ப்பித்துள்ளது. சென்னையில் உள்ள தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் கார் குறித்து விவரங்களை பின்னர் வெளியிடப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்த தமிழக முதல்வருக்கும், ஃபோர்டு தலைமைக்கும் இடையே நடந்த சந்திப்பைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.போர்டு இன்டர்நேஷனல் மார்க்கெட்டிங் குழுமத்தின் தலைவர் கே ஹார்ட், சென்னை ஆலைக்கான பல்வேறு சாத்திய கூறுகளை கருத்தில் கொண்டு தமிழக அரசு அளித்து வரும் ஆதரவிற்கும் நன்றி தெரிவித்துள்ளார். இந்த முயற்சியானது இந்தியாவிற்கான ஃபோர்ட் நிறுவனத்தின் அர்ப்பணிப்பையும், தமிழ்நாட்டின் உற்பத்தித் திறனையும் பயன்படுத்தி புதிய உலக சந்தைகளை அடைவதற்கான அவர்கள் இலக்கை எடுத்துக்காட்டுகிறது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஃபோர்டு தமிழ்நாட்டில் 12000 நபர்களை பணியில் அமர்த்த உள்ளது. மேலும், அடுத்த 3 ஆண்டுகுளில் 250 முதல் 3000 வேலையாட்களை நியமிக்கவும் ஃபோர்டு திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள தனது லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு சேவை, மார்க்கெட்டிங் மற்றும் உத்தரவாதக் கவரேஜ் ஆகியவற்றில் தொடர்ந்து உத்தரவாதம் வழங்க ஃபோர்டு நிறுவனம் உறுதியுடன் உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : நான்கு முனை போட்டி உறுதியானது
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் தள்ளிவைப்பு: அமைச்சர் அருண்ராஜ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இதுதான் சூப்பர் Couple Goal.. மனைவி மாநகராட்சி ஆணையர்.. கணவர் எஸ்.பி.. வேலூரில்!
சர்வதேச சுடோகு தினம் .. மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர் விளையாட்டு!
"லட்க்கி கொய்லா கொஞ்சம் கொடுப்பா".. நாக்பூரை பதற வைத்த மெட்ராஸ்!
சிந்தனைச் சிதறல்.. வடிப்பது சிற்பம் தான் என்றாலும்.. சிறுகச் சிறுக சிதைக்கும் உளிகள்!
சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை!
காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: நகராட்சி சார்பில் மாணவர்களுக்கு தட்டு, டம்ளர் வழங்கல்
{{comments.comment}}