சென்னை: திமுக ஆட்சியில், தமிழகத்தில் படுகொலைகள் நடைபெறாத நாளே இல்லை எனும் அளவுக்குச் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருக்கிறது என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்த பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், திமுக ஆட்சியில், தமிழகத்தில் படுகொலைகள் நடைபெறாத நாளே இல்லை எனும் அளவுக்குச் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருக்கிறது. இதன் உச்சகட்டமாக, இன்று காலை, திருச்சி மாநகர் பீமநகர் மார்சிங் பேட்டையில், பள்ளிகள் அதிகம் உள்ள பகுதியில், குறிப்பாக காவலர் குடியிருப்பு உள்ளேயே புகுந்து ஒருவரை வெட்டி படுகொலை செய்திருப்பது, பொதுமக்கள் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியிருக்கிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தற்போது திருச்சியில் தான் தங்கியிருக்கிறார். அப்படி இருக்கும்போது, காவலர் குடியிருப்பிலேயே இப்படி ஒரு படுகொலை நடப்பது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கின் அவலநிலையைக் காட்டுகிறது.
பெண்கள், முதியவர்கள், குழந்தைகள், என யாருக்குமே பாதுகாப்பில்லாத நிலையில் தமிழகம் தரம் தாழ்ந்திருக்கிறது. காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையாலாகாத நிலையில் காவல்துறையை வைத்திருப்பது, தமிழகத்தின் சாபக்கேடு என்று தெரிவித்துள்ளார்.
மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்ட விழாவில் மின்தடை
அப்பா மாதிரி நாமளும் ஆகணும்!
வேர் இன்றி விருட்சம் தான் உண்டோ?
சங்கமம்!
இரயில் சினேகம்.. ஒரு நிமிடக் கதை (21)
வாழ வைக்கும் வல்லாரைக்கு ஜே.. நினைவாற்றலைப் பெருக்கும் சூப்பர் கீரை!
பெருமிழலை குறும்ப நாயனார் திருவடிகள் போற்றி போற்றி!
சங்குப் பூவின் மகிமை தெரியுமா உங்களுக்கு.. தாய்லாந்தில் வேற லெவல் மகிமை இது!
நீதி ஆட்சியில்!
{{comments.comment}}