சேலம்: முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி தனஇது 70வது பிறந்த நாளை இன்று கட்சியினருடன் பிரமாண்ட கேக் வெட்டிக் கொண்டாடினார்.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இன்று 70வது பிறந்த நாள் ஆகும். இதை அதிமுகவினர் தடபுடலாக கொண்டாடி வருகின்றனர். வெயில் கொளுத்தி வருவதால் தன்னைக் காண்பதற்கு யாரும் வந்து அலைய வேண்டாம் என்று ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக் கொண்டுள்ளார். இந்த நிலையில் இன்று சேலத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அவரது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
70 கிலோ கேக் வரவழைக்கப்பட்டு அதை எடப்பாடி பழனிச்சாமி வெட்டினார். பின்னர் கேக் துண்டுகளை அவர் கட்சியினருக்கு வழங்கி மகிழ்ந்தார். பிறகு தொண்டர்களுக்கு தென்னங்கன்று உள்ளிட்ட மரக் கன்றுகளை வ ழங்கினார். தமிழ்நாடு முழுவதும் மோர்ப்பந்தல்கள் அமைத்தும், அன்னதானம் வழங்கியும் அதிமுகவினர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.
கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், தேர் இழுத்தல், அன்னதானம், நலத் திட்ட உதவிகள் வழங்குதல் என்று அதிமுகவினர் தடபுடலாக எடப்பாடியார் பிறந்த நாளைக் கொண்டாடி வருகின்றனர்.
அன்னையர் தின வாழ்த்துகள்

இதற்கிடையே, இன்று அன்னையர் தினம் என்பதால் எடப்பாடி பழனிச்சாமி அன்னையர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
பூமி தாங்கும் முன்பே, நம்மையெல்லாம் பூவாய் தாங்கியதோடு, ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும், அன்பின் முழு வடிவமான அன்னையர் அனைவருக்கும் எனது இதயமார்ந்த 'அன்னையர் தின' நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
'அம்மா' என்ற சொல்லை உச்சரிக்கும்போது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளைப் பெற்றுத் தந்து, தமிழக மக்களுக்காகவே தனது வாழ்நாளை அர்ப்பணித்து தவ வாழ்வு வாழ்ந்திட்ட இதயதெய்வம் அம்மா அவர்களின் நினைவுதான் நமக்கெல்லாம் வருகிறது.
போற்றுதலுக்குரிய அன்னையர் அனைவரும் பூரண நலத்தோடும், நீண்ட ஆயுளோடும் நிறை வாழ்வு வாழ்ந்திட வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து, உலகம் முழுவதும் வாழும் அன்னையர் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த 'அன்னையர் தின' நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?
வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!
டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் காலமானார்
தோசையம்மா தோசை.. ஹெல்த்தியான தோசை.. சுட்டுச் சுட்டுச் சாப்பிடுங்க.. சூப்பராக வாழுங்க!
அரங்கன் யாவுமே அறிந்தவனே!
அவரது நடிப்பாற்றல் பல தலைமுறைகளைக் கவர்ந்துள்ளது: ரஜினிகாந்திற்கு பிரதமர் மோடி, முதல்வர் வாழ்த்து
தங்கம் விலையில் அதிரடி... இன்று மட்டும் சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு... புதிய உச்சத்தில் வெள்ளி விலை!
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு... அதிகாலையில் பனிமூட்டமும் இருக்குமாம் - IMD
{{comments.comment}}