பிரதமர் மோடியின் ராஜஸ்தான் பேச்சு.. கண்ணியம் தவறிய செயல். எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!

Apr 23, 2024,03:25 PM IST

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி, ராஜஸ்தானில் நடந்த பாஜக கூட்டத்தில் இஸ்லாமியர்கள் குறித்துப் பேசியது கண்ணியம் தவறிய செயல். நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.


ராஜஸ்தானில் நடந்த  பாஜக கூட்டத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி இஸ்லாமியர்கள் குறித்துக் கூறிய கருத்துக்கள் பெரும் பரபரப்பையும், விவாதத்தையும் கிளப்பியுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் இதைக் கண்டித்துள்ளனர். காங்கிரஸ் சார்பில் டெல்லியில் புகார் தரப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கடுமையாக கண்டித்து அறிக்கை விடுத்திருந்தார்.


இந்த நிலையில் தற்போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:




பாரதப் பிரதமர்  நரேந்திர மோடி  அவர்கள் ராஜஸ்தான் மாநிலம் பஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது இஸ்லாமிய மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகும். வாக்கு வங்கி அரசியலுக்காக அரசியல் கட்சித் தலைவர்களும் நாட்டின் உயர் ஆட்சி பதவியில் உள்ள பாரத பிரதமர் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்து வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்தது அல்ல.


இஸ்லாமிய மக்களுடைய மனது புண்படும்படி இது போன்ற கருத்துக்களை தெரிவிப்பது ஏற்புடையதல்ல. அரசியல் கட்சி தலைவர்களும் ஆட்சி அதிகாரத்தில் மாண்புமிகு உயர் பதவியில் இருப்பவர்களும் இது போன்ற கருத்துக்களை தவிர்ப்பது நாட்டின் நலனுக்கும் மத நல்லிணக்கத்திற்கும் நல்லது.


அரசியல் கட்சித் தலைவர்களின் இதுபோன்ற சர்ச்சை கருத்துகளால் சிறுபான்மையின மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் அதன் உணர்வுகளை தூண்டுவதாகும் அமைகிறது. தேர்தல் பிரச்சாரத்திற்காக கண்ணியம் தவறிய இது போன்ற மத துவேச கருத்துகள் யார் பேசினாலும் அது இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும் நாட்டை நலனுக்கு இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

news

இலந்தை பழப் பாட்டி (குட்டிக் கதை)

news

தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?

news

நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும்: நயினார் நாகேந்திரன்

news

அண்ணன் எங்க அண்ணன்.. கல்வி மாபெரும் ஆயதம்.. அதுவே உயர்த்தும்.. இது ஒரு உண்மைக் கதை!

news

பால் காவடி பன்னீர் காவடி புஷ்பக் காவடி.. முருகப்பெருமானுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?

news

இந்த பிரபஞ்சம் நீயே (You are the Universe )

news

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால்.. எங்களை அழையுங்கள்.. உதவி எண்களை அறிவித்தார் சீமான்

news

ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: வானிலை மையம்

அதிகம் பார்க்கும் செய்திகள்