சென்னை: அதிமுகவில் இணைவது தொடர்பான விவகாரத்தில், நேற்று முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார் முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார். என்னை எச்சரிக்க உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை என அவர் கூறியுள்ளார்.
அதிமுகவில் ஆர்பி உதயகுமார் எந்த நிலையில் இருந்தார் என்பது குறித்து இப்போது பேசினால் நாகரிகமாக இருக்காது. இதனால் எனது குடும்பத்தை பற்றி பேசுவதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுத்திருந்தார் ஓ பன்னீர்செல்வம்.
இதற்கு பதிலடி கொடுத்து எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் தற்போது பேசியுள்ளார். பதவிக்காக எந்த எல்லைக்கும் போகும் ஓ. பன்னீர்செல்வம் எனக்கு எச்சரிக்கை விடுக்க எந்த தகுதியும் இல்லை என்று கூறியுள்ளார் ஆர்.பி. உதயகுமார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
மாண்புமிகு அம்மா அவர்கள் தங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை குறைபாட்டில் தான் அப்போது அம்மா அவர்கள் தங்கள் மீது வைத்திருந்த அபிமானத்தைப் பற்றி சாமானிய தொண்டன் உதயகுமாரிடமும் பகிர்ந்து கொண்டார் என்பதை நான் வெளியில் சொன்னால் நாகரிகமாக இருக்காது. டாக்டர் வெங்கடேஷ் வீட்டில் நான் எந்த இடத்தில் அமர்ந்திருந்தேன் என்பதை தயவு செய்து சொல்லுங்கள். உங்களது காலில விழுந்து கேட்டுக் கொள்கிறேன். அதை உலகுக்குச் சொல்லுங்கள். நீங்கள் எந்த இடத்தில் அமர்ந்திருந்தீர்களோ அதே இடத்தில்தான் நானும் அமர்ந்திருந்தேன்.
இப்போது வேண்டுமானாலும் உங்களுடைய சுயநலத்தை தெரிந்து கொள்வதற்கு தங்க தமிழ்ச்செல்வன் தொடங்கி நைனார் நாகேந்திரன் வரை எத்தனையோ தலைவர்களை என்னால் பட்டியலிட்டு சொல்ல முடியும். தனக்கு பின்னாலும் முன்னாலும் எந்த ஒருவரும் அம்மாவின் கவனத்திற்கு, தலைமை உடைய கவனத்திற்கு வந்து விடக்கூடாது என்பதில் நீங்கள் கவனமாக இருப்பீர்கள். இப்போதும் தேனி மாவட்டத்திலேயே நீங்கள் கேட்டால் சொல்வார்கள்.
இதுதான் நீங்கள் கற்றுக் கொண்ட பாதை, தர்மம். ஆகவே உங்களை வணங்கி கேட்கிறேன் என்னை எச்சரிக்க வேண்டிய தகுதி உங்களுக்கு இல்லை. நான் எந்த எச்சரிக்கையையும் எதிர்கொள்ள தயாராகத்தான் இருக்கிறேன். இன்னும் விவாதிக்க வேண்டும் என்று நீங்கள் விருப்பப்பட்டால் நானும் தயாராகத்தான் இருக்கிறேன் என்று கூறியுள்ளார் ஆர்.பி. உதயகுமார்.
2024ம் ஆண்டில் கொலை குற்றம் 6.8% குறைந்துள்ளது.. சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்!
சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றிய இந்திய அணிக்கு.. பரிசுத்தொகையை அள்ளிக் கொடுத்த.. பிசிசிஐ!
தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு.. மழை பிளஸ் வெயில் இதுதான் நிலவரம்..!
டாஸ்மாக் விவகாரத்தில்.. அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க தடை.. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு!
கொலை பட்டியல் தான் திமுகவின் சாதனை.. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கு!
15 சிலிண்டருக்கு மேல் பயன்படுத்த கட்டுப்பாடு விதித்த.. இந்திய எண்ணெய் நிறுவனம்..!
Govt jobs vacancy: போக்குவரத்து துறையில்.. 3,274 காலிப் பணியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
நாதக... இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளராக... வீரப்பன் மகள் வித்யாராணி நியமனம்
மார்ச் 22.. மக்கள் நீதி மய்யம் .. கமல்ஹாசன் தலைமையில் செயற்குழு, நிர்வாகக் குழு கூட்டம்!
{{comments.comment}}