சென்னை: பிரதமர் மோடியால் சாதிக்க முடியாததை, இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சாதித்துள்ளார் என்ற வயிற்றெரிச்சலில் உள்ளார் எடப்பாடி பழனிசாமி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை பல்லாவரத்தில் ஏழை, எளிய மக்களுக்கு இன்று இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கக்கூடிய மாநிலக் கல்விக் கொள்கையை வெளியிட்டேன்.
கல்வியும் மருத்துவமும் தான் திராவிட மாடல் அரசின் இரண்டு கண்கள். ஏற்றத் தாழ்வற்ற சமூகத்தை கட்டமைப்பதை அரசு கொள்கையாக வைத்துள்ளது. தமிழகத்தில் 2021 முதல் தற்போது வரை 17.74 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. தென்குமரியில் இருந்து சென்னை வரைக்கும் சமச்சீர் வளர்ச்சியாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு மாவட்டத்திற்கும் திட்டங்களை பார்த்து பார்த்து செய்து வருகிறோம்.

வளர்ச்சி என்பது பொருளாதார அடிப்படையில் தான். அறிவு ஜீவிபோல் அறிக்கை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிச்சாமி. மோடியால் முடியாததை ஸ்டாலின் சாதிக்கிறார் என்பதே அவர்களுக்கு வயிற்றெரிச்சல். இதை பொறுக்க முடியாமல் எதிர்க்கட்சித் தலைவர், நண்பருடன் இணைந்து பேசுகிறார் என்று தெரிவித்தார்.
தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு
முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்
சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!
லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
விடுதலை வேண்டா பசி!
சிந்தனைச் சிதறல்.. உழைப்புக்கு நம்மை உரமாக்கினால்.. அது நம்மை உயர் தரமாக்கும்!
காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!
காதல் மொழி காற்றின் வழி!
எல்லாம் கூறினேனே பெண்ணே!
{{comments.comment}}