லாஸ் ஏஞ்செலஸ்: 90ஸ் கிட்ஸ்களின் மனம் கவர்ந்த, மிகப் பிரபலமான Friends சீரிஸின் முக்கிய நடிகர்களில் ஒருவரான மாத்யூ பெர்ரி மரணமடைந்துள்ளார். அவரது வீட்டில் பாத் டப்பில் அவர் சுயநினைவின்றி கண்டுபிடிக்கப்பட்டார். பின்னர் அவரது மரணம் உறுதி செய்யப்பட்டது.
அவர் இயற்கையாக மரணம் அடைந்தாரா அல்லது தற்கொலையா அல்லது கொலையா என்பது இதுவரை தெரிவிக்கப்படவில்லை. இதுகுறித்து உரிய விசாரணைக்குப் பின்னரே தெரிவிக்கப்படும் என்று லாஸ் ஏஞ்செலஸ் காவல்துறை தெரிவித்துள்ளது.
Friends டிவி தொடர் உலகப் புகழ் பெற்றது. அதிலும் மாத்யூ பெர்ரிக்கு மிகப் பெரிய ரசிகர் கூட்டமே உண்டு. தற்போது 54 வயதாகும் மாத்யூ பெர்ரி, Friends தொடரில் மிக மிக கலகலப்பாக நடித்துப் பெயர் பெற்றவர். அவரது பாடி லாங்குவேஜ், அவர் பேசிய வசனங்கள் எல்லாமே சூப்பர் ஹிட்டானவை. ஏகப்பட்ட பெண் ரசிகர்களை அவருக்கு உருவாக்கியவை.
இவரது தந்தை ஜான் பென்னட் பெர்ரியும் கூட நடிகர்தான். தாயார் சூசன் மாரி லாங்போர்ட்.. முன்னாள் கனடா பிரதமர் பியர்ரி ட்ரூடியோவின் செய்தித் தொடர்பாளராக இருந்தவர். தற்போதைய கனடா பிரதமர் ஜஸ்டினின் தந்தைதான் பியர்ரி என்பது குறிப்பிடத்தக்கது. 1969ம் ஆண்டு பிறந்தவரான மாத்யூ பெர்ரி, மான்ட்ரீல் மற்றும் லாஸ் ஏஞ்சலெஸ் என மாறி மாறி வளர்ந்தவர் ஆவார். இவருக்கு 1 வயது இருக்கும்போது பெற்றோர் இருவரும் பிரிந்து போய் விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குழந்தை நடிகராக தனது கலை வாழ்க்கையைத் தொடங்கியவர் மாத்யூ பெர்ரி. திரைப்படங்கள், டிவி நாடகங்களில் நிறைய நடித்துள்ளார். ஆனால் இவருக்கு மிகப் பெரிய பிரேக் கொடுத்தது Friends தொடர்தான். முதல் முறையாக இது 1994ம் ஆண்டு என்பிசி டிவியில் ஒளிபரப்பாகத் தொடங்கியது. மிகப் பெரிய ஹிட் தொடர் இது. இதில் நடித்த அத்தனை பேருமே பிரபலமானார்கள். இளம் பெண்களின் மிகப் பெரிய தோழனாக மாறிப் போனார் மாத்யூ பெர்ரி.. இப்படி ஒரு நண்பன் எனக்கு வேண்டும் என்று எல்லாப் பெண்களுமே ஏங்கும் அளவுக்கு இதில் அவரது நடிப்பு அபாரமாக இருந்தது. அத்தனை இயல்பானவராக இதில் வந்து போயிருப்பார் மாத்யூ பெர்ரி.
இந்த தொடரில் மாத்யூ பெர்ரி நடிக்க ஆரம்பித்தபோது அவருக்கு வயது 25தான். இதில் நடித்த இன்னொரு சூப்பர் ஸ்டார் ஜெனீபர் அனிஸ்டன். அதேபோல கார்ட்னி காக்ஸ், லிசா குட்ரோ, மாட் லெபிளாங்க், டேவிட் ஸ்விம்மர் ஆகியோரும் நண்பர்களாக நடித்தனர். அத்தனை பேருமே பிரபலமானார்கள். ஓவர்நைட்டில் சூப்பர் ஸ்டார் ஆன பெருமைக்குரியவர்கள் இவர்கள்.
Friends தொடரில் சான்ட்லர் பிங் என்ற வேடத்தில் நடித்திருப்பார் மாத்யூ பெர்ரி. அவர் பேசும் காமெடியான வசனங்கள் மிகப் பிரபலமானது. இவரது கடைசி சில ஆண்டுகள் மிகவும் துயரமானது.. மது, போதைப் பொருட்களுக்கு அடிமையாக மாறினார் மாத்யூ பெர்ரி. அதிலிருந்து மீள மிகவும் சிரமப்பட்டவர். மறு வாழ்வு மையத்தில் சேர்ந்து தன்னை சரி செய்து கொண்டார். இதை அவரே Friends ரீ யூனியன் சந்திப்பின்போது தெரிவித்தபோது அனைவருமே அதிர்ச்சி அடைந்தனர். 2018ம் ஆண்டு உடல் நலம் வெகுவாக பாதிக்கப்பட்டு சில மாதங்கள் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டிருந்தார் மாத்யூ பெர்ரி.
மாத்யூ பெர்ரியின் மரணம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.. நல்ல நண்பனை இழந்து விட்டோம்.. இவரைப் போல ஒரு நண்பன் கிடைக்க முடியாது.. இந்த நண்பன் இல்லாமல் Friends குழு முழுமை பெறாது என்று பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை... இன்று திடீர் குறைவு... எவ்வளவு தெரியுமா?
வாழப்பாடி வெள்ளாள குண்டம் ராஜலிங்கேஸ்வர் சிவன் கோவில் நந்தியைப் பார்த்திருக்கீர்களா?
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கப் போகிறீர்களா.. கமல்ஹாசனே சொன்ன ஹேப்பி நியூஸ்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 08, 2025... நல்ல காலம் பிறக்குது
{{comments.comment}}