ஏர் முனைக்கு நேரிங்கே எதுவுமே இல்லை!

Nov 10, 2026,04:04 PM IST

- பன்முகக் கவிஞர் க.முருகேஸ்வரி 


கன்டிப் போன தோளில் கலப்பை ஏத்தி ...


கருக்கலிலே கழனி வந்து

ஏரைப் பூட்டி


கையிலே காய்ப்பு காய்க்க


கால் கடுகடுக்க

 நிலத்தை உழுது


வேனா வெயிலில்

வேர்வை சிந்த

வேலை செய்து




ஆழ உழுது போட்டு


ஆற‌விட்டு விதை விதைத்து 


உயிரைக் கொடுத்து

 வெளைய வச்சு 


உலகுக்குக் கொடுப்பான் சோறு


உழவன் உடம்பெல்லாம் பூசிக் கொள்வான்  சேறு


உழுதவன் கணக்கு பார்த்தா 


உழக்கு கூட மிஞ்சாது


மேகம் மாரி மறந்து விட்டால் 


பசியும் பட்டினியுமே பயிர் 


வெள்ளம் புயல் வந்துவிட்டால்


வேதனையே விளைச்சல்


உலகுக்காக உழவைப் போற்றும்

 உழவனின் இருப்பை


உண்ணும்போது சொல்லிடும்

ஒவ்வொரு பருக்கை


உணர்ந்தால் மட்டுமே புரியும்

உழைப்பின் பெருமை


உழுத உழவனின் அருமை


உழவே தலை

உழவனே தெய்வம் 


உழவுக்கு வந்தனை செய்வோம்! 


(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். தமிழ்நாடு அரசின் டாக்டர் எஸ் ராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருது பெற்றவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார். சிங்கப்பூர் பொழில் பண்பலையில் கவிதைகள் எழுதுகிறார்.. சிங்கப்பெண், அருந்தமிழ் தாரகை விருதுகள் பெற்றுள்ளார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்