- இந்துமதி
ஹைதராபாத்: இயக்குநர் ஷங்கர், நடிகர் ராம்சரண் உள்ளிட்டோர் தயாரிப்பாளரும், ராமோஜி குழுமத்தின் அதிபருமான ராமோஜி ராவ் மறைவுக்கு படப்பிடிப்புத் தளத்தில் மெளன அஞ்சலி செலுத்தினர்.
ஈநாடு ஊடகத்தின் நிறுவனரும், தொழிலதிபரும், படத் தயாரிப்பாளருமான ராமோஜிராவ் இன்று அதிகாலை ஹைதராபாத்தில் காலமானார். அவருக்கு 87 வயதாகிறது. தென்னிந்தியாவின் முக்கிய தொழில் முனைவோரில் அவரும் முக்கியமானவர்.

கடந்து சில மாதங்களாக உடல்நிலை குறைவு காரணமாக ஹைதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு உடல்நிலை மோசமானதால் வென்டிலேட்டர் வைக்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று காலை அவர் மரணமடைந்தார்.
ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டி நிறுவியவரும் இவரே. பாகுபலி, புஷ்பா போன்ற பல படங்கள் இங்கு எடுக்கப்பட்டன. இந்நிலையில் இவருடைய மறைவுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்து வருகிறார்கள்.
அந்த வகையில் கேம் சேஞ்சர் படக் குழுவினர் படப்பிடிப்புத் தளத்தில் இருந்தபோது, மறைவுச் செய்தி வந்தது. இதையடுத்து படப்பிடிப்புத் தளத்திலேயே ராமோஜி ராஜவ் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இயக்குநர் ஷங்கர், நடிகர் ராம் சரண் உள்ளிட்டோர் மெளன அஞ்சலி செலுத்தி இரங்கல் தெரிவித்தனர்.
தேர்தல் களம் காண தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.. மதுராந்தகத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்!
இறங்கிய வேகத்தில் வேகத்தில் வேகம் எடுத்த தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா?
திருவனந்தபுரம் டூ தாம்பரம்.. அம்ரித் பாரத் ரயில்.. தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
பெண்ணுக்கு பேருதவி.. எது தெரியுமா?
எல்லாமே சக்தி (It's All About Energy)
தைப்பூசமும் வள்ளலாரும்.. உணர்த்தும் அருட் பெரும் செய்தி!
நீதி சொல்ல இத்தனை நூல்களா.. தமிழின் தனிப்பெருமை.. உங்களுக்குத் தெரியுமா?
தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்
திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்
{{comments.comment}}